முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சதீஷ், ‘ராஜவம்சம்’ என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகராகவும் உயர்ந்திருக்கிறார்.
2006 ஆம் ஆண்டில் ‘ஜெர்ரி’ என்ற படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி இருந்தாலும், 2010 ஆம் ஆண்டில் வெளியான ‘தமிழ்ப்படம்’ என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சதீஷ். அதன் பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும், நகைச்சுவையில் தனக்கென தனித்துவமான அடையாளத்தை உருவாக்காததால் , இவர் ஒரளவு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பதால், திரையுலகில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் சதீஷ், கடந்த ஆண்டில் ஒன்பது படங்களில் நடித்திருந்தார்.
தற்போது அறிமுக இயக்குனர் கதிர் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் தயாராகிவரும் ‘ராஜவம்சம்’ என்ற படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை சொந்த குரலில் பாடி, பின்னணி பாடகராக உயர்ந்திருக்கிறார். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார்.
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டரில்,“ இதன் மூலமாக அனைத்து இசையமைப்பாளர்களும் தெரிந்து கொள்ளுங்கள். நான் சம் சி எஸ் இசையில் ஒரு பாடலை பாடி இருக்கிறேன்..’ என்று பதிவிட்டி ருக்கிறார். படத்தில் ஓப்பனிங் சாங்காக இடம்பெறும் இந்தப்பாடலில், சசிகுமாரும், சதீஷும் இணைந்து நடனம் ஆடியிருக்கிறார்கள். இப்படத்தில் இவர்களுடன் நிக்கி கல்ராணி, ராதாரவி, யோகி பாபு, விஜயகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே திருமணத்திற்கு பிறகு நடிகர் சதீஷ், பின்னணி பாடகராகவும், சிவா இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM