அமெரிக்காவின் இண்டியான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழநதுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு இண்டியான பகுதியில் உள்ள நகரப் பகுதியிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் அப்பகுதி பொலிஸார் தெரிவிக்கையில்,

இண்டியானவின் நகர் பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டுள்ளார்.

அத்தோடு குறித்த சம்பவத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு சந்தேக நபரை தேடி வருவதோடு , சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இண்டியான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.