மத்திய  மாகாணத்தில் கடந்த 5  மாதங்களுக்குள் 1269 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கண்டி, மாத்தளை, நுவரெலியா  ஆகிய மூன்று  மாவட்டங்களிலேயே  1269 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 

கண்டி மாவட்டத்தில் 986 டெங்கு நோயாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 149 டெங்கு நோயாளர்களும்  நுவரெலியா மாவட்டத்தில் 124 டெங்கு நோயாளர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்த  சுகாதாரப் பிரிவினர் அதிகமாக நகர பிரதேசங்களிலேயே இவ்வாறு  டெங்கு நோயாளர்கள் அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர்கள்  சுட்டிக்காட்டினர். 

டெங்கு நோயினை  கட்டுப்படுத்தும் வகையில் அந்தந்த  மாவட்டங்களில் சுகாதார பிரிவினர் வீடு வீடாகச் சென்று மக்களை தெளிவுபடுத்தும்  நடவடிக்கைகளையும் அவற்றை தடுப்பதற்கு தடுப்பு புகை திட்டத்தையும் செயல்படுத்தி வருவதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.