இந்தியாவின் உத்தரபிரதேசில் விச வாயு கசிவினால் மூன்று சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் இன்றைய தினம் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் ஒரு கம்பளம் மற்றும் ஒரு அமில தொழிற்சாலைக்கு இடையில் அமைந்துள்ள விச வாயு குழாயொன்றிலேயே இந்த கசிவு ஏற்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

சம்பவம் நடத்த இடத்திற்கு பொலிஸாரும் மாவட்ட ஆட்சியாளரும் விரைந்துள்ளனர்.