காணியை போலி காணி உறுதிகள் ஊடாக 492 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ததாக சி.ஐ.டி.க்கு கிடைத்திருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட  விசாரணைகளுக்கு அமைய  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனின் விளக்கமரியலை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை  கொழும்பு பிரதான நீதிவான்  லங்கா ஜயரத்ன  நீடித்தார்.

இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, சந்தேக நபருக்கு பிணையளித்தால் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்  என தெரிவித்தே  ரிப்கான் பதியுதீனின் விளக்கமறியலை நீடிக்க நீதிவான் உத்தரவிட்டார்.