மஹிந்த ஆட்சிக்காலத்தின்போது,  பயன்படுத்தப்பட்ட 1500 அரச வாகனங்கள் காணாமல் போய்யுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநயக்க தெரிவித்தார்.

இவ்வாறு  காணாமல் போய்யுள்ள அனைத்து வாகனங்களும் அப்போதைய ஜனாதிபதி அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும், அதைப்பற்றி கூறாது அவர்கள் இன்று அரசாங்கத்தை விமர்சிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வாகன இறக்குமதியாளர்களுடன் இன்று  இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி அமைச்சர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.