இலங்கை போக்குவரத்து சபையின் வென்னப்புவ டிப்போவுக்குச் சொந்தமான கொழும்பு - வவுனியா சேவையில் ஈடுபடும் பஸ்ஸின் சாரதி மீது புத்தளம் கீரியங்கள்ளி பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை காலை தாக்குதல் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புத்தளம் - கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸில் பயணித்த இளைஞர் ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக இ.போ.ச பஸ் சாரதி பத்துளுஒயா பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்புக் கடமையிலிருந்த பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த இரண்டு பஸ்களும் முந்தல் கீரியங்கள்ளி பகுதியில் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட போது, இரண்டு பஸ் சாரதி மற்றும் நடத்துனர்களும் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறு இரண்டு பஸ்களின் சாரதிகளும். நடத்துனர்களும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, புத்தளம் - கொழும்பு தனியார் பஸ்ஸில் பயணித்த நபர் ஒருவர் இ.போ.ச பஸ் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, குறித்த இ.போ.ச பஸ் சாரதி உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பத்துளுஓயா பகுதியில் உள்ள பொலிஸ் காவலரனுக்கு சென்று சம்பவம் தொடர்பில் அங்கிருந்த பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார்.
இதனையடுத்து, அங்கு சில நேரம் அமைதியின்மை ஏற்பட்டது. அத்துடன், இரண்டு பஸ்களிலும் பயணம் செய்த பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
சுமார் 45 மணி நேரத்திக்குப் பின்னர் இரண்டு தரப்பினரும் சமாதானமாகியதுடன், தாக்குதல் நடத்தியதாக ௯றப்படும் இ.போ.ச பஸ் சாரதியிடம் தாக்குதலை நடத்திய இளைஞர் பொலிஸார் மற்றும் பயணிகள் முன்னிலையில் பகிரங்கமாக மன்னிப்பும் கோரிய பின்னர் குறித்த இரண்டு பஸ்களும் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM