தென் மாகாணத்தில் ஒழுங்கற்ற விதத்தில் ஆசிரியர்களை சேர்த்து கொள்வதற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளது. 

இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது குறித்து புகார் அளிக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க  தெரிவித்தார்.

இவ்வாறு ஒழுங்கற்ற முறையில் ஆசிரியர்களை உள்வாங்குதல் பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் அநீதி யாகும் என தெரிவித்த அவர், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்  இன்று பிற்பகல் கொழும்பு, புதுகடை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கப்படவுள்ளதாக, தெரிவித்தார்.