அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிரதான பொருட்களின் விலையை 50 சதவீதத்தால் குறைக்கவுள்ளதாக சீன நிதி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

குறித்த தீர்மானம் இன்று அமுலுக்கு வருமென அந்நாட்டு நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அத்தோடு இம்மாதம் 14 ஆம் திகதி இரு தரப்பு பேச்சுவார்தை நடத்தப்டுமென அறிவித்துள்ளதோடு, சில முக்கிய பொருட்களின் விலை அதிரிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருதரப்பும் மேற்கொள்ளும் ஒப்பந்தங்கள் சர்வதேச ரீதியில் வளர்ச்சியை அதிரிக்குமென சீன நிதி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.