யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு கடற்கரை பகுதியில் விற்பனைக்குத் தயாராக இருந்த நூறு கிலோக் கிராம் கஞ்சா சங்கானை மதுவரித் திணைக்களத்தினரால் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை குறித்த கஞ்சா போதைப்பொருள் கடத்தலுக்குத் தயாராக இருப்பதாகக் கடற் படையினர் சங்கானை மதுவரித் திணைக்களத்துக்கு வழங்கிய தகவலையடுத்து சங்கானை மதுவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் பிரபாத் விக்கிரம சூரிய தலைமையில் மதுவரி அத்தியட்சகர் மதன் மோகன்,பொறுப்பதிகாரி சஞ்சு ஸ்ரீமன்ன ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.