கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 99ம் கட்டைப் பகுதியில் அதில் பயணித்த பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது பின்னே வருகை தந்திருந்த தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் தனியார் பஸ்ஸின் உதவியாளர் உயிரிழந்துள்ளதாகவும், சாரதி படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த இச்சம்பவம்  இன்று அதிகாலை 5.00 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களை கந்தளாய் மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.