முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவின் பிணை மனுவினை இரத்து செய்யமாறுக் கோரி சட்டமா அதிபர் மீளாய்வு மனுவொன்றினை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ளார்.

மீளாய்வு மனுவினை இன்று (13)  உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த மனுவானது திலின கமகேவின்  பிணை மனுவினை  இரத்து செய்து, அவரை விளக்கமறியலில் வைப்பதற்காக தாக்கல் செய்யப்பட்டதென சட்டமா அதிபர் சுட்டிக்காட்டினார்.

யானைக் குட்டியொன்றினை சட்டவிரோதமாக தன்னகத்தே வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் சரணடைந்த திலின கமகேவிற்கு  கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய பிணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.