(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை 1000 ரூபா வரையில் அதிகரிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் அடுத்த வாரத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக  பிரதமர் மஹிந்த  ராஜபக்‌ஷ சபையில் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் துறையினருக்காக நாளாந்த சம்பளத்தை 1000 ரூபா வரையில் அதிகரிப்பது தொடர்பாக உறுதியளிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன. 

இதன்படி மார்ச் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் இருதரப்புக்கிடையிலான கூட்டு ஒப்பந்தத்தை எதிர்வரும் வாரத்தில் கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கையேடுக்கப்படவுள்ளது.  

அதன்படி பெருந்தோட்ட நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படும் தேயிலை , தென்னை , இறப்பர் போன்ற பெருந்தோட்டங்களிலும் மற்றும் சிறு தேயிலை துறைக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கி செயற்படும்  என அவர் தெரிவித்துள்ளார்.