புத்தளம் மாவட்ட செயலகத்திற்குற்பட்ட நவகத்தேகம பிரதேசத்தில் அப்பகுதி மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை இன்று முதல் (5) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் திணைக்கள பொது முகாமையாளரின் பணிப்புரையின் கீழ் புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய உதவி முகாமையாளரின் தலைமையில் புத்தளம் மாவட்ட செயலகத்திற்குற்பட்ட நவகத்தேகம பிரதேசத்தில் அப்பகுதி மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை இன்று முதல் (5) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 15 நாட்களுக்கு குறித்த செயற்பாடு  முன்னெடுக்கப்பட உள்ளது. இதன்போது நவகத்தேகம விகாரையில் முகாம் அமைக்கப்பட்டு 15 நாட்களுக்கு தங்கியிருந்து குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்க உள்ளனர்.

புத்தளம் பிராந்திய வனஜீவராசிகள் காரியாலய அதிகாரிகள், புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்ட்ப் பிரிவினர், கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்களத்தினர் இனைந்து செயட்பாட்டை முன்னெடுத்துள்ளனர். இதன்போது 'ட்ரொன்' கெமராக்களை இயக்குவதற்கு பாலாவி விமானப்படையினரும் இணைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பிராந்திய வனஜீவராசிகள் திணைக்கள உதவி முகாமையாளர் தெரிவித்தார். 

நவகத்தேகம காட்டுப்பகுதியில் காணப்படும் காட்டு யானைகளையே தப்போவ காட்டுப் பகுதிக்கு விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.