ராஜிதவையும் , ரஞ்சனையும் கொரோனா வைரஸ் பாதுகாத்துள்ளது : பியல் நிஸாந்த டி சில்வா 

Published By: R. Kalaichelvan

05 Feb, 2020 | 04:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புதிய ரக கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்களான  ராஜித சேனாரத்னவும், ரஞ்சன் ராமநாயக்கவும்  பாதுகாக்கப்பட்டுள்ளார்கள்.

இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் மக்கள் இவ்வாறானவர்களை பாதுகாக்காது புறக்கணிக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஸாந்த டி சில்வா தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தாக்குதலின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க, ராஜித்த ஆகிய இருவர் மாத்திரமே நன்மை பெற்றுள்ளார்கள்.

இவர்களின் தலைப்பு செய்தியை இன்று கொரோனா கைப்பற்றியுள்ளது. இவ்விருவர் மீதும் சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டுக்களை நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

பாராளுமன்றத்தின் பாரம்பரிய கோட்பாடுகளுக்கு பங்கம் விளைவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்  ராமநாயக்க,  குறுகிய அரசியல் தேவைகளுக்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை  முன்வைத்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன உள்ளிட்டோர்   பாதுகாக்கப்படாது புறக்கணிக்ககப்பட  வேண்டும்.

ஸ்ரீ  லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையிலான அரசாங்கம் நிச்சயம் தோற்றம் பெறும்.

ஐக்கிய தேசிய கட்சியை பிறர் வீழ்த்த வேண்டிய தேவை கிடையாது.    கட்சிக்குள் தற்போது தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகள்  உத்திரமடையும் வேளையில் கட்சி சுயமாகவே வீழ்ச்சியடையும்.    பொதுஜன  பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில்  பொதுத்தேர்தலுக்காக வகுக்கப்பட்ட  திட்டங்கள் இம்மாதம் முதல்  மக்கள் மத்தியில்  கொண்டு செல்லப்படும்  என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17