(நா.தனுஜா)
எயார்பஸ் ஊழல் பற்றிய தகவல்கள் வெளியாகியிருப்பதுடன், அதனுடன் தொடர்புபட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன அதிகாரி மற்றும் அவரது மனைவியைக் கைது செய்யுமாறும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
ஆனால் அவர்களிருவரும் விமானம் ஏறி, வெளிநாட்டிற்குச் சென்றதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து, உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இதனுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் கண்டறியப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும வலியுறுத்தினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் நாட்டுமக்கள், பௌத்த தேரர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பொய்யான வாக்குறுதிகளையளித்து, அவர்களை ஏமாற்றியே ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டது.
ஆனால் அரசாங்கம் தம்மை ஏமாற்றியிருக்கிறது என்ற உண்மை இப்போது மக்களுக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. சம்பிக்க ரணவக்கவின் கைது, சுவிட்ஸர்லாந்து தூதரக ஊழியர் கடத்தல் விவகாரம், ராஜித சேனாரத்ன கைது, ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் கசிவு விவகாரம், கொரோனா வைரஸ் தொற்று ஆகியவற்றைக் காண்பித்து புதிய அரசாங்கம் பதவியேற்றுக்கொண்ட பின்னராக கடந்த இருமாத காலத்தில் உண்மையான பிரச்சினைகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பியிருக்கிறது
அவ்வாறு திசைதிருப்பியது மாத்திரமன்றி திரைமறைவில் அவர்களுக்கு வேண்டிய காரியங்களையும் செய்துகொண்டிருக்கிறார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM