ஹட்டனிலிருந்து கடுகண்ணாவைக்கு புகையிரதம் மூலம் அனுமதிப்பத்திரமின்றி கடத்திவரப்பட்ட 379 கிலோ கிராம் நிறை கொண்ட கழிவுத் தேயிலையை கடுகண்ணாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, கம்பளை உதவி தேயிலை ஆணையாளரின் அறிக்கையைப் பெற்றபின் கண்டி நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மேற்படி தேயிலை, பிலிமத்தலாவை மற்றும் கெலிஓயாப் பகுதிகளுக்கு விற்பனை செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டவை என பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.