இது­வ­ரை­கா­லமும் நாட்­டை ­சிங்­க­ள­ பௌத்­த­நா­டு ­என்று கூறி ­அதை பலப்­ப­டுத்த உழைத்த பலர் இன்­று நான் கூறும் உண்­மை­க­ளை­ அ­டி­யோ­டு­ வெ­றுப்­ப­தை நான் உணர்­கின்றேன். ஒன்றில் நான் கூறும் உண்­மை­களை அவர்கள் ஏற்­க­வேண்டும், அப்­போ­து ­பி­ள­வு­ ஏற்­ப­டாது. அல்­ல­து நான் கூறு­வ­ன­ உண்­மைக்குப் புறம்­பா­னவை என்­பதை நிரூ­பிக்­க­ வேண்டும். அப்­போதும் பிள­வு­ ஏற்­ப­டாது. எனக்கு தலைக்­கு­னி­வு­ மட்­டுந்தான் அப்­போ­து ­ஏற்­படும் என்று தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் தலை­வரும் முன்னாள் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரு­மான சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

வாராந்த கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

கேள்வி:- அத்­து­ர­லிய ரத்­ன­ தேரர், நீங்கள் இனங்­க­ளுக்­கி­டையில் பிள­வை ­ஏற்­ப­டுத்­த ­மு­யற்­சிப்­ப­தாக கூறி­யுள்ளார். அது­ பற்­றி­ய­உங்கள் கருத்­து ­என்ன?

பதில்:- ஒரு ­சா­தா­ரண சிங்­கள குடி­மகன் இவ்­வாறு கூறி­யி­ருந்தால் நான் அதைப் பற்­றி­அ­லட்டிக் கொண்­டி­ருக்­க­மாட்டேன். ஆனால் வணக்­கத்துக்­கு­ரிய அத்­து­ர­லிய ரத்­ன ­தேரர் சில­கா­லத்­துக்கு முன்னர் என்­னை­ வந்­து­ சந்தித்து சென்­றவர். இப்­பொ­ழுதும் என்­னுடன் நல்­லு­றவைக் கொண்­டி­ருப்­பவர். அவர் நீங்கள் கூறு­வ­துபோல் சொன்­னாரோ இல்­லையோ என்­று நான் அறியேன். சொல்­லி­யி­ருந்தால் அதற்குப் பின்வரு­மாறு பதில் கூற ஆசைப்­ப­டு­கிறேன்.

இனங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையைக் கட்­டி­யெ­ழுப்­ப­ வேண்டும். பொரு­ளா­தா­ரத்தை வளர்க்­க­ வேண்டும். வறு­மையில் உள்­ள­ மக்­களின் பிரச்­சி­னை ­தீர்க்­கப்­ப­ட ­வேண்டும். நாம் சம­மா­ன­வர்கள் என்­ப­து­ போன்ற அவரின் கருத்­துக்­களை நான் வர­வேற்­கின்றேன். அனை­வ­ருக்­குள்ளும் ஓடும் இரத்தம் ஒன்­றுதான் என்று வைத்­தி­யர்கள் கூறு­கின்­றார்கள். அதை எவரும் மறுக்­க­வில்லை.

ஆனால் நான் இனங்­க­ளுக்­கி­டை யில் பிளவை ஏற்­ப­டுத்த முயல்­கின்றேன் என்­பதை என்ன அடிப்­ப­டையில் அவர் கூறினார் என்­பது எனக்கு தெரி­ய­வில்லை.

நான் உண்­மை­களை வெளி­யிட்­டதால் இனப்பிள­வுகள் ஏற்­ப­ட­ வாய்ப்­பி­ருப்­ப­தாக­ அவர் கரு­தி­யி­ருந்தால் அதை நான் மறுக்­கின்றேன். பொய்­களைக் கூறி முழு சிங்­க­ள­ மக்­க­ளையும் பிழை­யா­க ­வ­ழி­ந­டத்­தி­ய­ ஒ­ரு­நாட்டில், நான் உண்மை இதுதான் என்றால் அதற்குப் பொறுப்­பு­ நா­னா ­அல்­ல­து­ பி­ழை­களை இது­வ­ரை­ கா­லமும் வெளிப்­ப­டுத்தி­ய ­வ­ணக்­கத்­துக்கு­ரி­ய ­தேரர் போன்­ற­வர்­களா? நான் பிள­வை ­ஏற்­ப­டுத்தப் பார்க்­கின்றேன் என்­று­ அவர் கூறும்போது ­எ­னது உண்மைக் கூற்­றுக்­க­ளை­ ம­றுக்க முடி­யா­த­தால்தான் அவர் அவ்­வாறு கூறு­கின்­றாரோ என்­று நான் நினைக்­க­ வேண்­டி­யுள்­ளது. அதா­வது நாங்கள், பொய்­க­ளையும் புர­ளி­க­ளையும் புரட்­டுக்­க­ளை­யும் சிங்­க­ள­ மக்கள் மனதில் இது­காறும் பரவ விட்­டுத்தான் வந்­துள்ளோம். அவற்றைப் பொய் என்­று ­அ­டை­யா­ளங்­கண்டு உண்­மையை நீங்கள் கூறப் போய் சிங்­க­ள ­மக்கள் மனதில் பிள­வை ஏன் உண்­டாக்­கு­கின்­றீர்கள்? என்­று­ அவர் கேட்­ப­து போல் தெரி­கின்­றது.

இனங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையைக் கடைப்­பி­டிக்­க­ வேண்டும் என்று கூறும் வணக்­கத்­துக்­கு­ரி­ய­ தேரர் ஏன் வடக்­கு­ கி­ழக்கில் 2000 ஆண்­டு­க­ளுக்­குமேல் இன்­று­வ­ரையில் தமிழ் மொழி­ பே­சப்­பட்­டு ­வந்­த­தை ­ம­றந்­து­ சிங்­க­ள­ மொ­ழியே நாடெங்­கிலும் தனி­மொ­ழி­யாக இருக்­க­ வேண்டும் என்­ற­ க­ருத்­தை­ ஆ­த­ரித்து­ வந்தார்? இதனால் பிளவு ஏற்­படும் என்­று­ அவர் கரு­த­வில்­லையா? இப்­போதும் வட­கி­ழக்­கு ­மா­கா­ண ­ச­பை­க­ளுக்கு சிங்­க­ளத்தில் மட்டும் கடி­தங்கள் மத்­திய அர­சினால் அனுப்­பப்­பட்­டு ­வ­ரு­கின்­றன. அதைப் பிள­வை ­ஏற்­ப­டுத்தும் செயல் என்­று ­அவர் ஏன் சொல்ல­வில்லை?

இது­வ­ரை­ கா­லமும் நாட்­டை­ சிங்­க­ள­பௌத்­த ­நா­டு­ என்று கூறி­ அதை பலப்­ப­டுத்த உழைத்த பலர் இன்­று நான் கூறும் உண்­மை­க­ளை ­அ­டி­யோ­டு­ வெ­றுப்­ப­தை  உணர்­கின்றேன். ஒன்றில் நான் கூறும் உண்­மை­களை அவர்கள் ஏற்­க­வேண்டும் அப்­போ­து­ பி­ள­வு­ ஏற்­ப­டாது அல்­ல­து நான் கூறு­வ­ன­ உண்­மைக்குப் புறம்­பா­னவை என்­பதை நிரூபிக்க­ வேண்டும். அப்­போதும் பிள­வு­ ஏற்­ப­டாது.எனக்குத் தலைக்­கு­னி­வு­ மட்­டுந்தான் அப்­போ­து­ ஏற்­படும்.

நான் என்ன கூறி­விட்டேன் பிள­வை­ ஏற்­ப­டுத்த? 1. சிங்­க­ள­மொழி கி.பி. 6ஆம், 7ஆம் நூற்­றாண்­டு­களில் தான் வழங்­கு­மொ­ழி­யாகப் பரி­ண­மித்­தது. அதற்­கு ­முன்னர் சிங்­க­ளவர் என்று கூறப்­படும் சிங்­க­ள­மொ­ழி­ பே­சு­ப­வர்கள் இந்­த­ உ­ல­கத்­தி­லே­யே­ எங்­கேயும் இருந்­தி­ருக்­க­ மு­டி­யாது. ஏனென்றால் சிங்­க­ளவர் என்­று நாம் அடை­யாளம் காணும் மக்கள் மொழி­வா­ரி­யா­க­வே­ அவ்­வா­று­ அ­டை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றார்கள்.

2. தமிழ் மொழியும் இந்து மதமும் புத்தர் வாழ்ந்­த­கா­லத்துக்­கு­முன்­பி­ருந்தே இந்­த­நாட்டில் ஒருங்­கே ­பே­சப்­பட்டும் கடைப்­பி­டிக்­கப்­பட்டும் வந்­துள்­ளன. நாட்டைக் காக்கும் ஐந்து ஈஸ்­வ­ரங்­களும் புத்­த­கா­லத்­துக்கு ­முற்­பட்­டவை.

3. புத்­த­ச­மயம் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்­ட­போது அதனை ஏற்­றுக்­கொண்­ட­வர்கள் தமி­ழர்களே. அந்தக் காலத்தில் சிங்­க­ளவர் என்ற ஒரு மொழி­வா­ரி­யா­ன ­இனம் வருங்­காலத்தில் பல­ நூற்­றாண்­டுகள் கழிந்­து ­இ­ருக்கப் போகின்­றது என்று எவரும் கனவில் கூட சிந்­தித்­தி­ருக்­க­வில்லை.

4. மகா­வம்சம் பாளி­மொ­ழியில் எழு­தப்­பட்­ட ­ஒரு புனை­கதை. அதற்கும் சிங்­க­ளத்­துக்கும் அல்­லது சிங்­க­ள­வர்­க­ளுக்கும் எந்தத் தொடர்பும் இருக்­க­வில்லை. புனை­க­தையைப் புனை­க­தை­யா­கவே நாம் ஏற்கத் தயா­ராக இருக்­க­ வேண்டும்.

5. ஆதி­கா­ல­ சிங்­களம் (Proto Sinhala) என்­று­ ஒன்­றி­ருந்­தது என்­ற ஒ­ரு­ க­ருத்­து­ நி­லவு­கின்­றது. 1000 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் வரும் ஒரு­மொ­ழி­யையும் அதனைப் பேச­முற்­ப­டு­ப­வர்­க­ளையும் இந்தச் சொற்­றொடர் குறிப்­ப­தானால் பின்னர் சிங்­க­ள­வரும் சிங்­க­ள­மொழியும் வரப்­போ­கின்­றன என்று கி.மு.300 ஆம் ஆண்­டிலே ஜோதிடம் பார்த்து கூறி­யி­ருந்­தார்­களா? பின்னர் வந்­த ­சிங்­க­ள­ மொ­ழியில் காணும் சொற்கள் 1000 ஆண்­டு­க­ளுக்­கு­முன்னர் இருந்­த­தென்றால் வேற்­று­மொ­ழியில் இருந்­த­ சொல்­லையோ சொற்­றொ­ட­ரையோ சிங்­களம் பின்னர் ஏற்­றுக்­கொண்­ட­தென்­பதே உண்மை. முன்னர் காணப்­பட்­டவை சிங்­கள எழுத்­துக்கள் அல்­லது ஆதி­சிங்­கள எழுத்­துக்கள் என்­று­ அர்த்­த­மில்லை. பின்­னை­ய­வற்றை முன்­னை­ய­வற்றின் சாயலைக் கொண்­டி­ருப்­ப­தாகக் கூறலாம். ஆனால் பின்­னை­யது தான் முன்பும் இருந்தது என்று கூறமுடியாது. முன்னையது இருந்தகாலத்தில் பின்னையது நினைக்கப்படக்கூடவும் இல்லை.

இவ்வாறு பலவற்றை நான் உண்மையெனக் கண்டு கூறுகின்றேனே ஒழிய மக்களுக்குள் பிளவை ஏற்படுத்த நான் முனையவில்லை.

சிங்­கள மக்கள் மத்­தியில் பிறந்து, படித்து, வாழ்ந்­து ­வந்­தவன் நான். என் அன்­பு­மிக்­க ம­ரு­ம­கள்­மார்கள் சிங்­க­ள­வர்கள். சிங்­க­ள­மக்கள் மீது­ எ­னக்குப் பகை­யோ­ வெ­றுப்போ இல்லை. ஆனால் பொய்­மையில் இலங்கை உழல்­வதைக் காண பொறுக்­க­மு­டி­யாது இருக்­கின்­றது. நான் உண்­மையைக் கூறி­வ­ரு­கின்றேன். நான் கூறும் உண்­மை­களில் பல­வற்றை பேரா­சி­ரியர் இந்­தி­ர­பால 2005 இல் எழு­திய நூலில் காணலாம். நான் கட்டுக்கதை­க­ளை வெளிக்­கொண்டு வர­வில்லை. இனத்­து­வேஷம் மிக்­க­வர்­களே இது­காறும் பொய்­க­ளையும் புனை­க­தை­க­ளையும் உண்­மை­யென சிங்­க­ள­ மக்­களை நம்­ப ­வைத்­துள்­ளார்கள். ஆகவே பிளவு ஏற்படப் போகின்றதென்றால் புனைகதைகளை முதலில் அரங்கேற்றியவர்களே அதற்குக் காரணம். நான் அல்ல.