தலைமன்னார் மன்னார் பிரதான வீதியில் தலைமன்னாரிலிருந்து மன்னாருக்கு மோட்டர் சைக்கிளில் பயணித்த நபரை தாராபுரம் இராணுவ சோதனை சாவடியில் சோதனையிட்டபோது ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ் சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,

நேற்று சுதந்திரத் தினத்தன்று (04.02.2020) தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நண்பகல் தலைமன்னாரிலிருந்து மன்னாரை நோக்கி ஒரு மோட்டர் சைக்கிளில் பயணித்துள்ளார்.

அப்பொழுது தாராபுரத்திலுள்ள இராணுவ சோதனை சாவடியிலுள்ள பாதுகாப்புப் படையினர் சந்தேகத்தின் பேரில் குறித்த நபரையும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் சோதனையிட்டுள்ளனர்.

அப்பொழுது மோட்டர் சைக்கிள் இருக்கையின் அடியில் ஒரு கோடிக்கு மேல் பெறுமதியான அமெரிக்க டொலர் பணம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவரை மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவரின் வாக்கு மூலத்தைத் தொடர்ந்து மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மன்னார் பொலிசார் அவர்களை மேலதிக  விசாரணைக்கு உட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.