பதுவைப் பதியருக்கு கோலாகலத் திருவிழா 

Published By: MD.Lucias

13 Jun, 2016 | 10:05 AM
image

சந்திரா பெர்னாண்டோ

பதுவை நகர அந்­தோ­னியார் (Anthony of Padua) அல்­லது லிஸ்பன் நகர அந்­தோ­னியார் (Anthony of Lisbon) 1231 ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் திகதி பிரான்­சிஸ்கன் சபையில் தன்னை அர்ப்­ப­ணித்­தவர்.

இவர் லிஸ்பன் நகரில் பிறந்­தாலும் 'பது­வைப்­ப­தியர்' என்றே அழைக்­கப்­பட்டார். இதற்குக் காரணம் இத்­தாலி நாட்­டி­லுள்ள பதுவை நக­ரில்தான் தமது கடைசி நாட்­களை இவர் கழித்தார். அவர் மரித்­ததும் அடக்கம் செய்­யப்­பட்­டதும் அங்­குதான்.

Pic By: Vinoth Thiyagarajah

ஆக­வேதான் 'பதுவைப் பதியர்' என அழைக்­கப்­ப­டு­கின்றார். இவ­ரது புனித வாழ்வும், கூரிய நுண்­ண­றிவும், விவி­லிய ஆர்­வமும் இவர் இறந்த சில வரு­டங்­க­ளி­லேயே புனிதர் பட்டம் பெற வைத்­தது.

புது­மைகள் பல புரிந்துவரும் புனித அந்­தோ­னி­யாரின் வரு­டாந்த திரு­விழா இன்று 13ஆம் திகதி கொழும்பு, கொச்­சிக்­க­டையில் வெகு கோலா­க­ல­மாகக் கொண்­டா­டப்­படு­கி­றது. வரு­டந்­தோறும் புனி­தரின் திரு­வி­ழாவை, கொழும்பு வாழ் அடி­யார்கள் எந்­த­வித குறை­யு­மின்றி ஆர­வா­ர­மாகக் கொண்­டாடி மகிழ்­கின்­றனர். நாட்டின் நாலா புறங்­க­ளி­லி­ருந்தும் திரு­வி­ழாவில் பங்­கேற்க வரும் பக்தகோடிகள் எண்­ணி­ட­லங்கா.

ஐரோப்­பா­வி­லுள்ள போர்த்­துக்கல் நாட்டின் தலை­ந­க­ரான லிஸ்பன் மாந­க­ரிலே 1195 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் புனிதர் பிறந்தார். அவ­ரது பெற்­றோர்­க­ளான மார்டின் - – மேரி தம்­ப­தி­ய­ருக்கு மூன்­றா­வ­தாகப் பிறந்த குழந்­தை­யான இவ­ருக்கு பெர்­டி­ணாண்டு மார்ட்டின் தே பர்­னாந்து என்று பெய­ரிட்­டனர். கூரிய நுண்­ண­றிவு படைத்த பெர்­டி­ணாண்டு திறம்­படக் கல்வி கற்று, சிறந்த தேர்­வு­களைப் பெற்­றவர்.

ஆன்ம குருவைக் கலந்­தா­லோ­சித்து புனித அகுஸ்தின் துற­வற சபையில் சேர்ந்தார். ஊர், உற­வி­னரை விட்டு வில­கி­யி­ருப்­பதே நலம் என்று உணர்ந்த பெர்­டி­ணாண்டு தனது விருப்­பத்­திற்­கி­ணங்க அதி­பரின் அனு­ம­தியின்படி கொயிம்ரா என்னும் இடத்­துக்குச் சென்று குருத்­துவக் கல்வி பயின்றார். 1219ஆம் ஆண்டில், தனது 24 ஆம் வயதில் குருப்­பட்டம் பெற்றார்.

மொேராக்­கோவில் வேத சாட்­சி­க­ளாக மரித்த ஐந்து பிரான்­சிஸ்கன் சபை­யோரின் திருப்­பண்டம், பெப்­ர­வரி 1220-இல் கொண்டு வரப்­பட்­டது. இதைப் பற்றிச் சிந்­தித்த பெர்­டி­ணாண்டு தாமும் அவ்­வாறே கிறிஸ்­து­வுக்­காக வேத சாட்­சி­யாக வேண்டும் என்று தணி­யாதத் தாகம் கொண்டார். எனவே 1221ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரான்­சிஸ்கன் சபையில் சேர்ந்தார்.

பிரான்­சிஸ்கன் சபையில் சேர்ந்­த­போ­துதான் பெர்­ணாண்டு என்ற பெயரை மாற்றி அந்­தோ­னியார் மடத்தின் பெயரால் அந்­தோனி என்ற புதுப் பெயரால் அழைக்­கப்­பட்டார். சிறி­து­காலம் ஆபிக்­கா­வி­லுள்ள பிறமதத்­தி­ன­ருக்குப் போதிக்கச் சென்றார். உடல்­நிலை சரி­யில்­லா­ததால் மீண்டும் இத்­தா­லிக்கே திரும்­பினார். போர்லி என்­னு­மி­டத்தில் அதி­பரின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்கி அங்­குள்ள பேரா­ல­யத்தில் மறை­யு­ரை­யாற்­றினார்.

அன்­று­முதல் அந்­தோ­னியார் புகழ்பெற்ற பிர­சங்­கி­யானார். அதன்பின் பதுவை நகரில் திரு­மறை சார்ந்த பணி­செய்து மறை­யு­ரை­யாற்­றினார். அவரின் உரையைக் கேட்க ஆல­யங்­களில் பெருந்­தொ­கை­யான மக்கள் திரண்டுவந்­தனர். கிறிஸ்­தவக் கோட்­பா­டு­களை விளக்­கியும், அந்த நாட்­களில் நில­விய தப்­பறைக் கொள்­கை­களை எதிர்த்தும் ஆணித்­த­ர­மாகப் போதித்தார்.

தாம் வாழ்ந்த காலத்­திலும் இறப்­புக்குப் பின்னும் கடவுள் அளித்த கொடை­யினால் அநேக புது­மைகள் செய்தார். இதனால் கோடி அற்­புதர் புனித அந்­தோ­னியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.

அந்­தோ­னி­யாரின் அதி­சயப் பண்­புகள் மற்றும் அவர் புரிந்த புது­மைகள் பற்றி பல நிகழ்­வுகள் உள்­ளன.

ஒரு­முறை இவர் ரீமினி என்னும் கடற்­கரை நகரில் போதித்­ததைக் கேட்க சிலர் மறுத்­த­போது மீன்கள் நீரின் மேல் வந்து இவர் கூறி­யதைக் கேட்­டுக்­கொண்­டி­ருந்­தன.

இன்­னொ­ரு­முறை யூதர் ஒருவர் இயேசு நற்­க­ரு­ணையில் இருப்­பதை மறுத்­தாராம். ஆனால் பட்­டினி போடப்­பட்ட அவ­ரது கழுதை அதற்­குமுன் போடப்­பட்ட புல்லைத் தின்­னாமல் அந்­தோ­னி­யாரின் கட்­ட­ளைக்குக் கீழ்ப்­ப­டிந்து நற்­க­ரு­ணையின் முன் மண்­டி­யிட்டு ஆரா­தித்­தது.

மற்­று­மொறு புதுமை, இவர் வாழ்ந்த காலத்தில் கட­வு­ளு­டைய கிரு­பையால் இவர் செய்த புது­மை­களால் ஈர்க்­கப்­பெற்று இவரை நாடி­வ­ருவோர் எண்­ணிக்கை அதி­க­மா­னதால் துற­வி­யர்கள் மடத்தில் அமை­திக்குக் குந்­தகம் ஏற்­பட்­டது. இதன் பொருட்டு மடத்தின் தலைமைக் குரு இவர் எண்­ணி­ல­டங்கா புது­மைகள் செய்யத் தடை­வி­தித்தார்.

நாள் ஒன்­றுக்கு 13 புது­மைகள் மட்­டுமே செய்ய கட்­ட­ளை­யிட்டார். ஒருநாள் இவர் அன்­றைக்கு செய்­ய­கூ­டிய 13 புது­மை­க­ளையும் செய்து முடித்­தபின் மாலையில் வெளியே உலாவச் சென்றார். அப்­பொ­ழுது உய­ர­மான கட்­ட­டத்­தி­லி­ருந்து ஒருவர் தவறி விழுந்­த­வே­ளையில், "அந்­தோ­னி­யாரே என்னை காப்­பாற்றும்" என்று உத­விக்­குரல் எழுப்ப இவர் அவரை வானத்­தி­லேயே அந்­த­ரத்தில் தொங்க வைத்தார்.

பின், அருகில் இருந்த மடத்­திற்குச் சென்று தலைமைக் குரு­விடம் 14ஆவது புதுமை செய்ய அனு­மதி பெற்று அவரை தரையில் பத்­தி­ர­மாக இறக்­கினார். மற்­றொரு புது­மையில், ஒரே நேரத்தில் அந்­தோ­னியார் இரு இடங்­களில் போதித்­த­தா­கவும் வர­லாற்றில் கூறப்­ப­டு­கி­றது.

1231ஆம் ஆண்டு பல ஊர்­களில் மறை­யுரை ஆற்­றி­ய­தாலும், கடும் தவ முயற்­சி­க­ளாலும் நோய்­வாய்ப்­பட்டார். அதே ஆண்டில் ஜூன் மாதம் 13 ஆம் திகதி இறுதி திரு­வ­ருட்­சா­த­னங்­களைப் பெற்­றபின் இறை­யடி சேர்ந்தார். அப்­போது அவ­ருக்கு வயது 36. 336 ஆண்­டு­க­ளுக்­குப் பின் அவ­ரு­டைய கல்­ல­றை­யானது தோண்­டப்­பட்டு அவ­ரு­டைய நாக்கு மட்டும் அழி­யாமல் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அந்த நாக்கு இன்றும் பதுவை நகர் கோவிலில் பாது­காக்­கப்­பட்டு வரு­கி­றது. அந்­தோ­னியார் இறந்து ஓராண்டு நிறை­வ­தற்கு முன்­னரே அவர் புனிதர் என்று திருச்­ச­பையால் அறி­விக்­கப்­பட்டார்.

1946ஆம் ஆண்டு திருத்­தந்தை 12ஆம் பத்­தி­நாதர் புனித அந்­தோ­னி­யாரை திருச்­ச­பையின் மறை­வல்­லு­நர்­களில் ஒரு­வ­ராக அறி­வித்தார்.

கேட்கும் வர­ம­ருளும், அண்டி வந்­தோரை அர­ணைத்துக் காக்கும் புனித அந்­தோ­னியார், நம் ஒவ்­வொ­ரு­வரின் தேவை­யையும் இறை­வ­னிடம் கேட்டு நிறைவு செய்­கின்றார். இவ்­வா­ல­யத்தில் நடக்கும் புது­மை­க­ளுக்கோ அளவே இருப்­ப­தில்லை. இதனை நிரூ­பிப்­ப­தாக உள்­ளது, பிரதி செவ்­வாய்க்கிழமை தோறும் கொச்­சிக்­கடை ஆல­யத்­துக்கு வந்து குவியும் பக்தகோடிகளின் பெருவெள்ளம்.

இத்தருணத்தில் நாமும் புனிதரை நோக்கிச் செபிப்போம். எம் நாட்டில் நல்லாட்சி ஓங்கவும் நிரந்தர சமாதானமும் நீடித்த ஒற்றுமையும் நிலவவும் வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்