புகைத்தல், கல்­லீரல் அழற்சி மற்றும் எச்.பி.வி.வைரஸ் தொற்று  என்­ப­வற்றைக் குறைக்க உரிய நட­வ­டிக்கை எடுக்­கா­விட்டால் எதிர்­வரும் இரு தசாப்த காலப் பகு­தியில் புற்­று­நோயால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்கள் தொகை 60 சத­வீ­தத்தால் அதி­க­ரிக்கும் என உலக சுகா­தார ஸ்தாபனம் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை தன்னால் வெளியி­டப்­பட்ட அறிக்­கையில் எச்­ச­ரித்­துள்­ளது.

புகை­யிலைப் பாவ­னை­யி­லான மாற்றம் நோய்­க­ளுக்கு சிறப்­பான எதிர்ப்பு மருந்­து­களை வழங்­கு­வது என்­பவை மூலம் 7 மில்­லியன் பேரின் உயிரைக் காப்­பாற்றக் கூடி­ய­தாக இருக்கும் என அந்த ஸ்தாபனம் கூறு­கி­றது.

 80 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான புற்­றுநோய் பாதிப்பு குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் இடம்பெறும் என எதிர்வுகூறப்படுகிறது.