சமன் ரத்னப்பிரிய சில்வா இன்று 5 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவிருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து இராஜினாமா செய்தமையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு சமன் ரத்னப்பிரிய சில்வாவை நியமிக்க தீர்மானித்திருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.