சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படு­கொ­லை­யுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­க­ளாக கரு­தப்­படும் இரா­ணு­வத்­தினர் சிலர் ரிவிர பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் உபாலி தென்­னகோன் மற்றும் அவ­ரது மனைவி மீதான தாக்­குதல், நேஷன் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் கீத் நொயர் மீதான தாக்­குதல் ஆகி­ய­வற்­றுடன் தொடர்­பு­பட்­டுள்­ளமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் திசே­ராவின் கீழ் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த டி சில்வா தலை­மை­யி­லான பொலிஸ் குழு முன்­னெ­டுத்­துள்ள லசந்த படு­கொலை தொடர்­பி­லான சிறப்பு விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த விடயம் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது.

து.

இந் நிலையில் தற்­போது வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்ள லசந்த கொலை மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான உபாலி மற்றும் கீத் ஆகியோர் மீதான தாக்­குதல் சம்ப­வங்கள் உள்­ளிட்ட சில சம்பவங்கள் மிகத் திட்­ட­மிட்டு அரங்­கேற்­றப்பட்­டுள்­ளமை உறுதி­யா­கி­யுள்­ளது. அதில் தாக்­கு­த­லுக்கு அல்­லது குற்றச் செயலை அரங்­கேற்றுவதற்கு முன் னர் ஒரு தனிப்­படை குறித்த இலக்கு வைக்­கப்படும் நபரை வேவு பார்ப்­பதும், தாக்­ கு­தலை மற்­றொரு தனிப்­படை நடத்­து­வதும் அதன் பின்னர் பிறி­தொரு குழு சாட்­சி­யங்­களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் இது வரை­யி­லான விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளன.

இந் நிலை­யி­லேயே குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ்

இந் நிலையில் குறிப்­பிட்ட இரா­ணுவக் குழு­வுக்கு வேறு ஏதும் குற்றச் செயல்­க­ளுடன் தொடர்­புள்­ளதா என்­பதைக் கண்­ட­றி­யவும் தற்­போது மேல­திக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றஅத்­தி­யட்சர் திசே­ராவின் கீழ் முன்­னெ­டுக்­கப்பட்­டுள்ள லசந்த கொலை தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் தற்­போது சந்­தேக நபர்கள் சிலர் அடை­ யாளம் காணப்­பட்­டுள்­ளனர். எவ்­வா­றா­யினும் அந்த சந்­தேக நபர்­களைக் கைது செய்ய, குற்றப் புல­னாய்வுப் பிரிவு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க மேலும் சில தக­வல்கள் அவ­சி­ய­மா­வ­தா­கவும் அந்த தக­ வல்­களை வழங்க தொடர்ந்தும் இரா­ணுவம் இழுத்­த­டிப்புச் செய்­வதால் சந்­தேக நபர்­களைக் கைது செய்­வதில் தற்­போது சிக்கல் நில­வு­வ­தா­கவும் அறிய முடி­கி­றது.

ஏற்­க­னவே கல்­கிசை நீதிவான் இராணுவ தளபதிக்கு குறித்த தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஒப்படைக்க நேரடி உத்தரவொன்றினை பிறப்பித்துள்ள நிலையில் இராணுவமோ தொடர்ந்து தகவல்களை வழங்காது இழுத்தடித்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தகவ ல்கள் தெரிவிக்கின்றன.