(க.கிஷாந்தன்)

 மலையகத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்டித்தும் மக்களுக்கு தெளிவுறுத்தும் வகையிலும்  இன்று பிற்பகல் பொகவந்தலாவ கெம்பியன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது.

 

மலையகத்தில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தக்கூடாது எனவும் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறு கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் கோஷம் வெளியிட்டனர்.

இதேவேளை மக்களிடம் வாக்குகளை  பெற்று பாராளுமன்றம் செல்லும் அரசியல்வாதிகள் பாரளுமன்றத்திற்கு சென்று மௌனம் காக்காமல் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கான கடுமையான சட்டதிட்டங்களை  அமுல்படுத்துமாறு பாராளுமன்றத்தில் அழுத்தத்தை தெரிவிக்கபட வேண்டுமென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் மேலும் தெறிவித்தனர்.

இந்த தெளிவூட்டும் ஆர்பாட்டத்தில் சுமார் 150கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்டனர் இந்த ஆர்ப்பாட்டம்  பொகவந்தலாவ கெம்பியன் தோட்ட வைத்தியசாலையில் இருந்து கெம்பியன் நகர்வரை பாதாகைகளை  ஏந்தி பேரணியாக சென்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கெம்பியன் தோட்ட வைத்தியசாலையில் சிறுவர்கள் எதிர்நோக்கும் துஷ்பிரயோகங்கள் குறித்து சிறுவர்களை தெளிவூட்டும் செயலமர்வு ஒன்று பொகவந்தலாவ பொலிஸாரால் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.