தேசிய வர்த்தக கொள்கைக்கான முன்மொழிவு ஜனாதிபதியிடம் கையளிப்பு

Published By: R. Kalaichelvan

04 Feb, 2020 | 07:40 PM
image

தேசிய வர்த்தக கொள்கையொன்றுக்கான முன்மொழிவு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை கொழும்பு - 07 தொழில் வல்லுனர் சங்க மத்திய நிலையத்தில் இடம்பெற்ற வைபவத்தின் போது இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :  

சர்வதேச வர்த்தகத்திற்காக தேசிய வர்த்தக கொள்கையொன்றை வகுக்க வேண்டிய தேவை குறித்து நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. அதற்காக தொழில் வல்லுனர்களின் தேசிய முன்னணியினால் மக்கள் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. 

இவ் ஆணைக்குழுவிற்கு பல்வேறு தரப்பினரும் வழங்கிய கருத்துக்களின் சாராம்சம் இந்த முன்மொழிவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தொழில் வல்லுனர்களின் தேசிய முன்னணியின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தார். 

சட்ட ரீதியாக சுதந்திரமடைந்து 72 வருடங்களுக்குப் பின்னர் கொள்கை வகுப்பின் மூலம் ' உண்மையான சுதந்திரத்தை நோக்கி ' என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற கண்காட்சியையும் ஜனாதிபதி இதன் போது பார்வையிட்டார். 

இவ்வாறானதொரு கொள்கையொன்று இதுவரைக் காலமும் நடைமுறைப்படுத்தப்படாததன் காரணமாக அரசாங்கம் மாற்றமடைகின்ற போது கொள்கைகளும் பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு வருகின்றன.இது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் நல்லதல்ல என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58