தாய்லாந்தில், நெற்றியில் கண்ணுடன் பிறந்துள்ள நாய்க்குட்டியை அப்பகுதி மக்கள் அதிர்ஷ்டமாக கருதுகின்றனர்.

தாய்லாந்து நாட்டின் சச்சோயெங்சாவோ மாகாணத்தைச் சேர்ந்தவர் சோம்ஜாய் ஃபும்மான். அரசு ஊழியரான இவர் வளர்க்கும் நாய், கடந்த 2ம் திகதி 2 குட்டிகளை ஈன்றது.

அதில் ஒன்று, நெற்றியில் ஒரு கண்ணுடனும் அதற்கு மேல் சிறிய வால் ஒன்றுடனும் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளது.

இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த சோம்ஜாய், அந்த குட்டிக்கு சைக்ளோப்ஸ் என்று பெயரிட்டு மிகவும் பாசத்துடன் பராமரித்து வருகிறார். ‘சைக்ளோப்ஸ்’ நாய்க்குட்டியை அதிர்ஷ்டமாக கருதும் அந்தப் பகுதி மக்கள், தாங்கள் வாங்கும் லாட்டரிச் சீட்டுகளின் வரிசை எண்களில் அதன் பிறந்த திகதி வரும்படி தேர்வுசெய்கின்றமை குறிப்பிடத்தக்கது.