இஸ்­லா­மி­யர்­களின் புனிதக் கட­மை­களில் ஒன்­றான புனித ரமழான் நோன்­பினை நோற்­கவும் அதனைத் துறப்­ப­தற்கும் வச­தி­களை செய்து கொடுப்­பது நன்­மை­களை அள்ளிக் கொடுக்கும் புண்­ணிய கரு­ம­மா கும்.

அந்த வகையில் தான் அல்­லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்ளும் வித­மாக இல ங்கை பொலிஸ் திணைக்­க­ளமும் நோன்­பா­ளி­க­ளுக்கு நோன்பு துறக்கும் வித­மாக ஏற்­பா­டு­களைச் செய்­துள்­ளது.

நோன்பு துறக்கும் வைப­வ­மாக இன்­ றைய தினம் அதனை ஏற்­பாடு செய்­துள்ள பொலிஸ் திணைக்­களம் இத­னூ­டாக தேசிய நல்­லி­ணக்­கத்­தையும் பரஸ்­பர நட்­பு­ற­வையும் வளர்ப்­பதை நோக்­க­மாகக் கொண்­டுள்­ளது.

ரமழான் என்­பது இஸ்­லா­மிய நாட்­காட் ­டியில் (சந்­தி­ரனை அடிப்­ப­டை­யாக கொண்­டது) உள்ள 12 மாதங்­களில் ஒரு மாத­மா கும். இந்த மாதத்தில் தேகா­ரோக்­கிய முள்ள ஒவ்­வொரு முஸ்­லிமும் நோன்பு நோற்­பது கட்­டா­ய­மாகும்.

பொது­வாக அதி­கா­லையில் சூரிய உத­யத்­துக்கு முன்­ப­தாக உணவு, பானத்தை நிறுத்தி நோன்பு நோற்கும் முஸ்­லிம்கள் சூரியன் மறை­யும்­போது பேரீச்சம் பழம், தண்ணீர் அருந்தி தமது நோன்­பினைத் துற ப்பர். இவ்­வாறு ஒரு மாதம் முழு­வதும் பகல் நேரத்தில் நோன்­பி­ருப்­பது ஒவ்­வொரு தேகா­ரோக்­கி­ய­முள்ள முஸ்லி கட­மை­யாகும்.

இத­னூ­டாக அல்லாஹ் மீதான இறை பக்தி, விசு­வாசம் என்­பன உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வது எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அத்­து டன் இந்த நோன்­பூ­டாக ஒரு­வரின் பசி நிலை­மையை ஒவ்­வொ­ரு­வரும் புரிந்து கொள்ளும் சந்­தர்ப்­பமும் கிட்­டு­கி­றது.இதனை விட வருடம் பூரா­கவும் தொடர்ச்­சி­யாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் உட­லுக்கு நாம் வழங்கும் சிறிய ஓய்­வாகக் கூட இந்த நோன்பை அடை­யா­ளப்­ப­டுத்­த லாம். ஏனெனில் நோன்பு நோற்­பது உட­ லுக்கும் மன­துக்கும் சிறந்­தது என வைத்­தி­யர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

அல்­லாஹ்வின் உப­தே­சங்­களை உள்­ள­ட க்­கிய இறைக்­கட்­ட­ளைகள் அடங்­கிய புனித அல்­குர்­ஆனும் முதன் முத­லாக இந்த ரமழான் மாதத்­தி­லேயே அரு­ளப்­பட்­டது.

இந்த மாதத்தில் செய்­யப்­படும் ஒவ் ­வொரு நன்­மைக்கும் ஏனைய மாதங்­களில் கிடைக்கும் கூலியை விட அதி­க­மாக இறை­வனின் கூலி கிடைக்கும். இத­னாலோ என்­னவோ இம் மாதத்தில் முஸ்­லிம்­களில் பலர் அதி­க­தி­க­மாக தான தர்­மங்­களில் ஈடு­ப­டு­வதை நாம் அவ­தா­னிக்­கிறோம்.

அனைத்து முஸ்­லிம்­களும் தனது வரு­டாந்த வரு­மா­னத்தில் 4 சத­வீதம் ஏழை எளி­ய­வர்­க­ளுக்கு வழங்­கு­வது கட்­டா­ய­மாகும். அதன்­படி அந்த நட­வ­டிக்­கை­க­ளையும் பெரும்­பாலும் முஸ்­லிம்கள் இம் மாதத்­தி­லேயே முன்­னெ­டுப்பர். ஏனெனில் இம் மாதத்தில் கிடைக்கும் புண்­ணி­யமே அதற்குக் கார­ண­மாகும்.

முஹம்மத் நபி (ஸல்) கூறி­ய­தாக அனஸ் (ரழி) அறி­விக்­கி­றார். ‘தர்­மங்­களில் மிகச் சிறந்­தது பசியால் இருப்­ப­வ­ருக்கு வயி­றார உணவு கொடுப்பதாகும். இதி­லி­ருந்து பசியில் இருக்கும் ஒரு­வ­ருக்கு உணவு கொடுப்­பது எந்­த­ளவு உயர்ந்த நட­வ­டிக்கை என்­பதை விளங்க முடி­கி­றது.

எங்­க­ளு­டைய நற்­பண்­பு­களைப் பாது­கா க்க வேண்­டு­மெனில் பொருட்கள், பத­வி கள் மீதான எமது பேரா­சையில் இருந்து தவிர்ந்­தி­ருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

முஹம்மத் (ஸல்) ஒரு­முறை பின்­வ­ரு­மாறு கூறி­ய­தாக நபித்­தோழர் நபி பின் மாலிக் (ரலி) இப்­படி அறி­விக்­கி­றார். ‘கடும் பசியால் வாடும் இரு ஓநாய்கள் ஆட்டு மந்­தை­யொன்றில் புகுந்து ஏற்­ப­டுத்தும் நாச த்தை விட பொருட்கள், பத­விகள் மீதான பேராசை நன்­மை­களை அழித்­து­விடும்.

அந்த வகையில் பேரா­சை­யி­லிருந்து விடு ­பட்டு அதி­க­தி­க­மாக நன்­மை­யான கரு­மங்­ களை செய்யும் வகையில் நாம் எமது செயற்­பா­டு­களை அமைத்துக் கொள்ளல் வேண்டும். அத்­துடன் தான தர்­மங்கள் செய்­யும்­போது நாம் பயன்­ப­டுத்­தி­ய­வற்றை கொடுப்­பதில் இருந்து தவிர்ந்து கொள்ளல் வேண் டும். அதா­வது பழைய, நாம் பயன்­ப­டுத்தி, ஒதுக்­கி­ய­வற்றை தர்மம் செய்­யாது தான் பயன்­ப­டுத்­து­வதை ஒத்த நல்­ல­வற்­றையே தர்மம் செய்ய வேண்டும்.

புனித அல்­குர்­ஆனின் மூன்­றா­வது அத்­தி­யா­யத்தில் 92 ஆவது வச­னத்தில் இறைவன் பின்­வ­ரு­மாறு கூறு­கிறான்.

‘நீங்கள் விரும்­பு­வ­தி­லி­ருந்து தான­த­ர்மம் செய்­யா­த­வரை அதி­லி­ருந்து நன்மை கிடைக்­காது. நீங்கள் எதனை செலவு செய்­தாலும் அதனை அல்லாஹ் நன்­க­றிவான். அந்த வகையில் நாம் பிற­ருக்கு கொடுக்­கும்­போது நல்­ல­வற்­றையே கொடுக்க வேண்டும். மற்­றை­ய­வரின் பசிக்­கொ­டு­மையைப் புரிந்து கொண்டு அதனை நிவர்த்தி செய்ய உப­காரம் செய்ய வேண்டும்.

மரணத்தின் பின்னரான நன்மை, தீமை யை அளவிடும் விசாரணையில் நாம் வெற்றி பெற்று சொர்க்கத்தை அடைய வேண்டுமாயின் அதிகதிகமான நன்மை களைச் செய்ய வேண்டும். ஏனைய மாத ங்களை விட அதிக நன்மைகள் இம் மாதத் தில் புரியப்படும் நற்கருமங்களுக்குக் கிடை க்கும் நிலையில் அதிகமதிகமாக நன்மை கள் செய்வோமாக!

அப்துல் பாரூக் புவாத்

பொலிஸ் பரிசோதகர்

பொறுப்பதிகாரி, பொலிஸ் ஊடகப் பிரிவு