(எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட, பயங்கரவாத தடுப்பு, பிரபுக்கள் பாதுகாப்பு மற்றும் உளவுத் தகவல்கள் தொடர்பில் விஷேட தேர்ச்சி பெற்ற அதிகாரியான  சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  எம்.ஆர்.லத்தீப் இன்றுடன் ஓய்வு பெற்றார். 

41 வருட கால பொலிஸ் சேவையைத் தொடர்ந்து அவர் இவ்வாறு நேற்று  ஓய்வுபெற்றார்.

குற்றம், திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுத்தல்,போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவற்றிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதியாகவும் செயற்பட்டு வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு ஓய்வுபெற்றுள்ளார்.