(ஆர்.விதுஷா)

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாமை கவலையளிப்பதாக தெரிவித்திருக்கும்  தமிழ்  முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகனேசன் இலங்கையரின் அடையாளத்தை அழிக்கும்  வகையில் இந்த அரசாங்கம்  செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

72  ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது. இதன் போது தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்படவில்லை. 

இவ்விடயம் தொடர்பில் மனோகனேசன் அவருடைய உத்தியோக  பூர்வ டுவிட்டர் தளத்தில் மேற்கண்டவாறு பதிவு செய்துள்ளார். 

இலங்கையர் என்ற வகையில் சர்வதேச மற்றும் உள்ளு10ர்  சமூகங்களின் மத்தியில் உத்தியோகபூர்வமாக இடம் பெற்ற சுதந்திர  தினநிகழ்வின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாமை குறித்து கவலையடைகின்றேன். வெட்கமடைகின்றேன். 

இந்த அரசாங்கம் இலங்கையரின் அடையாளத்தை அழிக்கும் வகையில் செயற்படுவதுடன், தேசபற்றுள்ளவர்களை  ஏமாற்றும் வகையிலும் ,பிரிவினை  வாதத்தை  நியாயப்படுத்தியுமுள்ளதாக  மகோகனேசன் பதிவு செய்துள்ளார்.