தனது நாட்டுப் பிரஜையொருவர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அதிகாரிகள் இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளனர். 

மலோசியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் தொகை இதன் மூலம் 09 ஆக உயர்வடைந்துள்ளது.

41 வயதான குறித்த மலேசியப் பிரஜை கடந்த மாதம் சீனாவைச் சேர்ந்த சக ஊழியர்களுடன் சிங்கப்பூர் சென்றிருந்தார். இக் குழுவில் தொற்று நோயின் மையமான வுஹானிலிருந்து வந்த ஒருவரும் உள்ளடக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பி சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகே (ஜனவரி 29) அவரிடம் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட்டது.

இதன் பின்னர் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த அவரின் வைத்திய பரிசோனை முடிவுகள் நேற்றைய தினம் வெளிவந்துள்ளது.

இதில் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் முன்னர் எட்டு சீனர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 09 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.