யாழ்ப்பாணம் நாச்சிமார் பகுதியில் சுதந்திர தினத்தன்று மதுபானம் விற்ற ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுதந்திர  தினமாகையால் விடுமுறைதினமாகிய  இன்றைய தினம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பகுதியில் பிரதான வீதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற ஒருவர் யாழ்ப்பாண போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

250 மில்லி லீற்றர் கொள்ளளவுடைய 130 அதிவிசேச சாராய போத்தல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு  விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 45 வயது உடைய அதே இடத்தைச் சேர்ந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள அவரிடமிருந்து இன்றைய தினம் சாராயம் விற்ற 33,000 ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கைது நடவடிக்கையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அதிகாரிகள் இணைந்து செய்யப்பட்டதன் பயனாக குறித்த சட்டவிரோத மதுபான விற்பனை  பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்த நபர் தனது முதல்கட்ட விசாரணையின் போது கஷ்டத்தின் நிமித்தம்தான் இன்றைய தினம் இந்த சாராயத்தை விற்பனை செய்ததாகவும் நேற்றைய தினம் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து அதில் பெற்ற பணத்தின் மூலமே நேற்றைய தினம் சாராயத்தை வாங்கி  விற்றதாகவும் ஏனைய நாட்களில் அனைவரும் சாராய பார்களுக்கு சென்று சாராயம் வாங்குவதாகவும் இன்றைய தினம் மட்டும் தான் இவ்வாறு சட்டவிரோதமாக விற்க முடியும் எனவும் தான் கஷ்டத்தின் மத்தியில் தான் இதை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்

 இதற்கு பதிலளித்த யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி நீங்கள் இவ்வாறு போயா தினங்களில் சட்டவிரோதமாக சாராயத்தினைவிற்பதன் மூலம் இங்கே வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள்  பதிவாகிறது எனவும் தெரிவித்தார்