கண­வனால் விப­சா­ரத்­திற்கு விடப்­பட்ட பெண், பள்ளிப் பரா­யத்தில் தனது தாத்­தா­வினால் பாலியல் வல்­லு­ற­விற்­குற்­ப­டுத்­தப்­பட்­ட­தாக, பொலி­சா­ருக்கு வழங்­கிய முறைப்­பாட்­டை­ய­டுத்து அப்­பெண்ணின் தாத்­தாவை, மொன­ரா­கலைப் பொலிசார் நேற்று கைது செய்­துள்­ளனர். 

தனது கண­வனால் விப­சா­ரி­யாக்­கப்­பட்ட 19 வயதுப் பெண்,  மொன­ரா­கலைப் பொலி­சா­ருக்கு அளித்த முறைப்­பாட்­டி­லேயே இந்த விடயம் தெரி­ய­வந்­துள்­ளது. அம்­மு­றைப்­பாட்டில் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக காத­லித்து திரு­மணம் செய்த தனது கணவன் சில மாதங்கள் மட்­டுமே, தன்­னுடன் சந்­தோ­ஷ­மாக இருந்­த­தா­கவும், பின்னர் தனது கண­வனால் அவ­ரது நண்­பர்­க­ளுக்கும், பிற நபர்­க­ளுக்கும் தன்னை விற்­பனை செய்து, பணம் சம்­பா­தித்து வரு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார். 

மேலும் தன்னை துப்­பாக்­கி­யினால் சுட்டு கொலை செய்வேன் என்று அச்­சு­றுத்­து­வதால் செய்­வ­த­றி­யாத நிலையில் கண­வனால் குறிப்­பி­டப்­படும் நபர்­களின் இச்­சைக்கு ஆளாக்­கப்­பட்டு வரு­வ­தாக தெரி­வித்­துள்ளார். இதன்­போதே தனது தாத்தா பற்­றிய கதையை வௌியாக்­கி­யுள்ளார். அதா­வது,

 பள்­ளிப்­ப­ரா­யத்தில்  பெற்றோர் தன்னை  தாத்தா, பாட்­டியின் பொறுப்பில் விட்டு, சென்று விட்­டனர். தான் தனி­மையில் இருக்கும் போதெல்லாம், தாத்தா தன்னை பாலியல் வல்­லு­ற­விற்­குற்­ப­டுத்தி வந்­துள்ளார். இதனால் தாத்­தா­வுக்கு பயந்து, காட்டில் மறைந்­தி­ருக்க வேண்­டிய நிலையும் அடிக்­கடி தனக்கு ஏற்­பட்­ட­தாக பொலி­சா­ரிடம் தெரி­வித்­துள்ளார். 

இத­னை­ய­டுத்து பொலிசார் பெண்ணின் கண­வனை துப்­பாக்­கி­யுடன் கைது செய்­த­துடன், பெண்ணின் 77 வயது நிரம்­பிய தாத்­தா­வையும் கைது செய்­த­துள்­ளனர். இவர்கள் விசா­ர­ணையின் பின்னர் மொன­ரா­கலை மஜிஸ்ரேட் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­ப­டு­வ­ரென்று, மொன­ரா­கலை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி சேகித்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார். 

பொலிசார் மேற்­கொண்ட தீவிர புலன் விசா­ர­ணை­களில், விப­சா­ரத்­திற்கு செல்­லு­மாறு கண­வனின் வற்­பு­றுத்­தலை சகிக்­க­மாட்­டா­மை­யி­லேயே, இப்பெண் பொலிஸ் நிலையம் வந்து முறை­யிட்­டுள்­ள­மையும், இப்­பெண்ணின் கணவன் காப்­பு­றுதி நிறு­வ­ன­மொன்றில் முக­வ­ராக இருந்து வரு­கின்­ற­மையும், இவர் தனது மனை­வியை பதி­னை­யா­யிரம் ரூபா முதல் இரு­பத்­தை­யா­யிரம் ரூபா வரையில் தனது நண்­பர்­க­ளுக்கும், பிற­ருக்கும் விற்­பனை செய்து வந்துள்ளமையும், இதற்கான ஆதாரங்களும் பொலிசாருக்கு கிடைத்துள்ளதும் தெரிய வந்துள்ளதுது.

இப்பெண்ணின் மருத்துவ சிகிச்சை அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, அப்பெண்ணை பொலிசார் மொனராகலை அரசினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.