இலங்­கையில் போரின் இறு­திக்­கட்­டத்தில் இடம்­பெற்ற மீறல்கள் குறித்து விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள இடைக்­கால நீதிப் பொறி­மு­றை­களில், சாட்­சி­யம­ளிக்கத் தயா­ராக உள்­ள­தாக இறு­திப்­போரின் பின்னர் ஐரோப்­பா­விற்கு புலம்­பெ­யர்ந்த விடு­தலைப் புலி­களின் முன்னாள் உறுப்­பி­னர்கள் பல ரும் தெரி­வித்­துள்­ளனர்.

ஜஸ்மின் சூகா தலை­மை­யி­லான,

தென்­னா­பி­ரிக்­காவைச் சேர்ந்த, மனித உரி­மை­க­ளுக்­கான நிறு­வ­கத்­துடன் இணைந்து, அனைத்­து­லக உண்மை மற்றும் நீதி திட்டம் மேற்­கொண்ட ஆய்வின் போதே, அவர்கள் இந்த விருப்­பத்தை வெளி­யிட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

நான்கு ஐரோப்­பிய நாடு­களில் உள்ள 75 தமி­ழர்­க­ளிடம், இந்த ஆய்வு நடத்­தப்­பட்­டது. இவர்­களில், 54 பேர் முன்னாள் விடு­தலைப் புலி­க­ளாவர். ஆய்வில் பங்­கேற்­ற­வர்­களில் 26 வீத­மானோர் பெண்கள் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஆய்வு செய்­யப்­பட்­ட­வர்கள் அனை­வரும், 2009 மே மாதம் இலங்­கை­யி­லி­ருந்து போர் முடி­வுக்கு வந்த பின்னர், ஐரோப்­பா­வுக்குத் தப்பிச் சென்­ற­வர்­க­ளாவர்.

அவர்­களில் கால் பங்­கினர், முன்னாள் போரா­ளி­க­ளுக்­கான இலங்கை அர­சாங்­கத்தின் புனர்­வாழ்வு திட்­டத்தைப் பெற்­ற­வர்கள். விடு­விக்­கப்­பட்ட பின்னர் அவர்கள் தம்மால் அங்கு தப்­பித்து வாழுதல் சாத்­தி­ய­மற்­றது என்று உணர்ந்­த­தாக தெரி­வித்­துள்­ளனர்.

இந்த ஆய்வில் பங்­கேற்ற 73 வீத­மானோர், சண்­டைகள் நிறுத்­தப்­பட்ட பின்னர், தாம் இலங்கை அரச படை­களால் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­ட­தாக தெரி­வித்­துள்­ளனர். 54 வீத­மானோர், தாம் பாலியல் வல்­லு­றவு அல்­லது ஏனைய பாலியல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தாக தெரி­வித்­துள்­ளனர்.

இவர்­களில் 82 வீத­மானோர், இலங்­கையில் அமைக்­கப்­ப­ட­வுள்ள சிறப்பு நீதி­மன்­றத்தில் சாட்­சி­ய­ம­ளிக்க விருப்பம் தெரி­வித்­துள்­ளனர். எனினும், தமது அடை­யாளம் வெளிப்­ப­டுத்­தப்­படக் கூடாது என்று அவர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

பலரும், பாலியல் வன்­மு­றை­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாலும், அவர்­களின் குடும்­பத்­தினர் பலர் இன்­னமும் இலங்­கையில் வாழ்­வ­தாலும், தமது அடை­யா­ளங்கள் வெளிப்­ப­டுத்­தப்­படக் கூடாது என்று அவர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

வன்­மு­றை­களில் தமது பங்கு குறித்து முழு உண்­மையை வெளிப்­ப­டுத்­தி­னாலும், அவர்­க­ளுக்கு பொது­மன்­னிப்பு அளிக்கக் கூடாது என்று மூன்றில் இரண்டு பங்­கினர் கருத்து வெளி­யிட்­டுள்­ளனர்.

உண்மை ஆணைக்­குழு மற்றும் சிறப்பு நீதி­மன்றம், என்­ப­ன­வற்றில் பெரும்­பாலும் வெளிநாட்டு ஆணையாளர்கள் அல்லது நீதிபதிகளே இடம்பெற வேண்டும் என்று ஆய்வில் கருத்து வெளியிட்ட அனைவரும் ஒருமித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஆணையாளர்கள் அல்லது நீதிபதிகளில் பெண்களுக்கும் இடமளிக்க வேண்டும் என்று 50 வீதமானோர் கூறியுள்ளனர்.