சர்வதேச காலநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் எலுப்பிய கிரிட்டோ தன்பர்கை 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு சுவிடன் இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பரிந்துரை செய்துள்ளனர்.

தன்பர்க்கின் சர்வதேச ரீதியிலான சிந்தனைகளும், அவரின் காலநிலை மாற்றம் தொடர்பான கருத்துக்களும் சர்வதேச ரீதியில் அரசியல் மட்டத்தில் பல கேள்விகள் எழுப்பட்டது என சுவிடன் இடதுசாரி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களான  ஜென்ஸ் ஹோல்ம் மற்றும் ஹக்கன் ஸ்வென்னெலிங் கேள்வி எழுப்பினர்.

தன்பர்க்கின் காலநிலைய தொடர்பான கருத்துக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

அத்தோடு அவரே 2020 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபள் பரிசிக்கு பொருத்தமானவரென அவர்கள் சபையில் எடுத்துரைத்தனர்.

கடந்த வருடம் அதிக அளவில்  உலகெங்கும் உச்சரிக்கப்பட்ட பெயர் கிரிட்டோ தன்பர்க் ஆவார். பருவநிலை மாற்றத்திற்கு எதிராக அனைத்து நாட்டு அரசுகளும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரி சுவீடன் நாட்டின்  பாராளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தினார்

பருவநிலை மாற்றங்களைத் தடுக்க தன்னைப் போன்ற குழந்தைகளிடம் 'பாடசாலைக்கு போகாதீர்கள் ,  தங்களுக்காகவும் நமது எதிரக்கால வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றிகொள்வதற்கும்,எதிர்கால தலைமுறையினருக்காகவும் வெள்ளிக்கிழமை தோறும் வீதிக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.

இவ்வாரு தெரிவித்த அவர் அரசியல்வாதிகளை பார்த்து வெற்று வார்த்தைகளால் எனது குழந்தைப் பருவத்தைக் களவாடிவிட்டீர்கள். என்ன தைரியம் உங்களுக்கு? பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து எங்களை ஏமாற்றிவிட்டு இங்கு வந்து அமர்ந்திருக்கிறீர்கள்?'

என்று உலகத் தலைவர்களை ஐக்கிய நாடுகள் சபையினல் வைத்து கேள்வி எழுப்பியவராவார். அவருடைய இந்தக் கோபம் இயற்கை அழிவு ,காலிநிலை மாற்றங்களால் அழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம்  என சர்வதேச நாடுகள் உணரத்தொடங்கின.

இந்நிலையிலேயே அவரின் தேசபற்று உணர்வை கௌரவித்து அவருக்கு நோபல் பரிசு வழங்கவேண்டுமென சுவிடன் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அவரின் பெயரை பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.