யுத்தக் குற்றம் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணையின் போது எக்காரணம் கொண்டும் சர்வதேச நிபுணர்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது. வெளிநாடுகளிடமிருந்து எமக்கு தொழில்நுட்ப உதவிகள் மாத்திரமே அவசியமாகும். இதனை தவிர எமது உள்விவகாரம் சார்ந்த பிரச்சினைகளை எம்மால் தீர்த்துக்கொள்ள முடியும். மேலும் இந்த விடயத்தின் போது சர்வதேசத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிய போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போது எம்முடன் முரண்பட்ட சர்வதேச நாடுகளுடன் சகோதரத்துவத்தை கட்டியெழுப்பியுள்ளோம். அத்துடன் போர்குற்றம் இழைத்தாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தற்போது படிப்படியாக மறைந்து வருகின்றது. மேலும் எமக்கு விதித்த தடைகளும் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லிணக்க செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் வடக்கு மற்றும் தெற்கிலுள்ள இனவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பின்நிற்க மாட்டேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய செவ்வியொன்றின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் மேலும் குறிப்பிடுகையில்,
நாம் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு முன்னர் இலங்கையில் ஜனநாயகம் முழுமையாக குழித்தோண்டி புதைக்கப்பட்டிருந்தது. . மனித உரிமை மீறல்களுக்கு எல்லை இருக்கவில்லை. நீதிமன்ற கட்டமைப்பு ஊழலினால் மூழ்கடிக்கப்பட்டிருந்தது. மேலும் கடன் சுமையினால் நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு தள்ளப்பட்டிருந்தது. நல்லிணக்கத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட வண்ணமிருந்தது. தமிழ், முஸ்லிம், சிங்கள மூவின மக்களும் ஒருவரை ஒருவர் சந்தேக கண்கொண்டு பார்த்து அச்சம் கொள்ள வேண்டிய நிலைமை காணப்பட்டது. இதனால் விடுதலை புலிகள் இயக்கம் மீண்டெழும் பயமும் மக்களிடையே நிலவியது. இதன் காரணமாக சர்வதேச உறவுகள் எம்மை விட்டு விரைந்தோட தொடங்கியது. இதன்பிரகாரம் சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளும் இலங்கையை ஒதுக்கி வைத்து செயற்பட்டன.
இருந்தபோதிலும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி வந்ததன் பின்னர் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலமாக மனித உரிமைகள், ஜனநாயகம், நீதித்துறை கட்டமைப்புக்களுக்கு வலுசேர்க்கப்பட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டது. சர்வதேசத்திற்கு இதன்மூலம் எம்மீதான நம்பிக்கையை வலுப்பெற செய்தோம். தற்போது எம்முடன் முரண்பட்ட சர்வதேச நாடுகளுடன் சகோதரத்துவத்தை கட்டியெழுப்பியுள்ளோம். அத்துடன் போர்குற்றம் இழைத்தாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தற்போது படிப்படியாக மறைந்து வருகின்றது. மேலும் சர்வதேசத்தினால் எமக்கு விதித்த தடைகளும் நீக்கப்பட்டுள்ளது. .
தற்போது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது வடக்கிலும் சரி தெற்கிலும் சரி நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்படும் இனவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின்நிற்க மாட்டோம்.இதன்பிரகாரம் சர்வசேததத்திற்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் உள்ளக விசாரணை பொறிமுறையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக வெளிநாடுகளிடமிருந்து தொழில்நுட்ப உதவிகள் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம்.
ஆனாலும் யுத்த குற்றம் தொடர்பிலான உள்ளக விசாரணையின் போது எக்காரணம் கொண்டும் சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்படமாட்டார்கள். சர்வதேச நிபுணர்களின் உதவிகள் இல்லாமல் உள்நாட்டு பிரச்சினைகளை எம்மால் தீர்த்துக்கொள்ள முடியும். இந்நிலையில் தொழில்நுட்ப உதவிகளை சர்வதேசத்திடமிருந்து பெறும் போது நிபந்தனைகளுக்கு அடிப்பணிந்து செயற்படமாட்டோம் .
இதேவேளை கடந்த ஆட்சியின் போது இடம்பெற்ற பாரியளவிலான நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்காக விசேட நிதி குற்ற புலனாய்வு பிரிவு மற்றும் ஊழல் மோசடிகள் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கைகளுக்கும் சர்வதேசம் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்ற போதிலும் ஆரம்பத்தில் கட்சி அங்கத்தவர்களின் உதவி எனக்கு கிடைக்கபெறவில்லை. ஆனாலும் காலியில் நடந்த மே தின கூட்டத்தின் போது எனது அழைப்பினை ஏற்று இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். இதன்படி அடுத்து வரும் தேர்தலில் தோல்வி அடையா வண்ணம் கட்சியை பூரண மறுசீரமைப்புக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தோல்வி அடைந்தவர்களை தேசியப்பட்டியலில் உள்ளடக்கியதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் எனக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கொண்டு செல்வதற்கு அனுபவம் வாய்ந்தவர்கள் தேவைப்பட்டனர். இவ்வாறு அனுபவம் வாய்ந்தவர்கள் அனைவரும் திட்டமிடப்பட்ட வகையில் வேணும் என்றே தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர். . இதன்காரணமாகவே அவர்களை தேசியப்பட்டியலின் ஊடாக வரவழைத்தேன். அத்துடன் சீனாவுடன் எதிர்காலத்தில் பலமான உறவு கட்டியெழுப்பப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM