கிரிக்கெட் உலகக் கிண்ணம் உட்­பட எதிர்­கா­லத்தில் நடை­பெறவுள்ள ஐ.சி.சி. தொடர்­களை நடத்தும் உரி­மையை இலங்கைக்கு வழங்­கு­வது குறித்து அர­சுடன் பேச்­சு­ வார்த்தை நடத்த ஐ.சி.சி. தயா­ராகி­ வ­ரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

எதிர்­வரும் 2024ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்­டு வ­ரை­யான காலப்­ப­கு­தியில் ஐ.சி.சி.யின் தொடர்­களை நடத்தும் உரிமைக் கோரலை சர்­வ­தேச கிரிக்கெட் சம்­மே­ளனம் ஆரம்­பித்­துள்­ளது.

இந்த உரிமை கோரும் நட­வ­டிக்­கையில் பங்கேற்க இலங்­கைக்கு வாய்ப்பு கிடைத்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அதன்­படி ஒருநாள் உலகக் கிண்ணம், இ – 20 உலகக் கிண்ணம் மற்றும் 19 வய­துக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் என்ப­னவும் இந்த 8 ஆண்டு கால உரிமையில் அடங்கும் என்று தெரிவிக் கப்படுகின்றது.

2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணங்களை நடத்திய இலங்கைக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.