கொரோனா வைரஸ் தாக்கம் பரவ ஆரம்பித்ததையடுத்து, ஜப்பானில் ஆரம்பமாகவுள்ள 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இரத்து செய்யப்படலாம் என பரவி வரும் வதந்திகளை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நிராகரித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதி ஆரம்பாகவுள்ளன. இந் நிலையில் உலகம் முழுவதம் கொரோனா வைரஸ் காரணமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 467 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

ஜப்பானில் கொரோனா வைரஸால்  20 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவாகியுள்ளது.

இந் நிலையில் சமூக வலைத்தளங்களில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இரத்து செய்யப்படலாம் என வதந்திகள் வெளி வந்தன.

இந் நிலையிலேயே நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இவ்வாறான வதந்திகளை நிராகரித்தார்.

அத்துடன் ஒலிம்பிக் போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவது குறித்து சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் போன்ற அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.