(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கை விமான சேவையின் முன்னாள் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க ஆகியோரை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

2013 ஆம் ஆண்டு எயார்பஸ் ரக விமானங்களை கொள்வனவு செய்ய பிரான்ஸ் நிறுவனம் ஒன்றுடன் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகளை மையப்படுத்தி கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் குறித்த இருவரையும் கைது செய்ய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இவ்வாறு சட்ட விரோதமாக கையாளப்பட்டுள்ளதாக விசாரணையாளர்களான குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.