கொரோனாவுக்காக அரசாங்கம் செலவிடும் நிதி தேவையற்றதாகும் : திஸ்ஸ விதாரண 

Published By: R. Kalaichelvan

03 Feb, 2020 | 09:52 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டுக்கு இதுவரை பாதிப்பு ஏற்படாத கொரோன வைரஸை தடுப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சி, டெங்கு நோயை கட்டுப்படுத்த எடுப்பதாக தெரியவில்லையென லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் வட மத்திய மாகாண ஆளுநருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அதனால் அரசாங்கம் இதற்காக செலவிடும் நிதி தேவையற்றதாகும். அத்துடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் சீனாவுடன் இருக்கும் உறவும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சீனாவில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 12ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

300பேரளவில் மரணித்திருக்கின்றனர். இது 3வீதத்துக்கும் குறைவான மரண வீதமாகும். ஆனால் 2003ஆம் ஆண்டு ஹொங்கொங் மற்றும் அதனை அண்டிய பிராந்தியங்களில் ஏற்பட்ட மார்ஸ் வைரஸ் நோயினால் 10 வீதமானவர்கள் மரணித்தனர்.

அதனைத்தொடர்ந்து மத்திய கிழக்கு பிரதேசங்களில் ஏற்பட்ட மேர்க்ஸ் வைரஸ் நோயினால் 30 வீதமானவர்கள் மரணித்தனர். அவ்வாறான நிலைமைகளின்போது நாங்கள் வைரஸ் தொற்று ஏற்டாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாம்.

அத்துடன் கடந்த 3மாதங்ளில் இன்புழுவன்சா ஏ, வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 53பேர் மரணித்துள்ளனர். ஒவ்வவொரு வருடமும் குளிர்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்த வைரஸ் வருகின்றது.

இதுதொடர்பில் நாட்டுக்குள் பெரிதாக யாரும் அலட்டிக்கொள்வதில்லை. அதேபோன்று ஜனவரி மாதம் மாத்திரம் 8ஆயிரம் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3பேர் மரணித்துள்ளனர்.

ஆனால் கெரோனா தொடர்பில் எமது நாட்டுக்கு எந்த எச்சரிக்கையும் இதுவரை ஏற்படவி்லலை. அப்படி இருந்தும் மக்கள் மத்தியில் பாரிய அச்சம் ஏற்பட்டிருக்கின்றது.

அரசாங்கமும் இந்த வைரஸை கட்டுப்படுத்த பாரியளவில் செலவழித்து வருகின்றது. அத்துடன் அரசாங்கம் இந்த வைரஸை கட்டுப்படுத்த விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கின்றதா என்பதில் திருப்தியடைய முடியாமல் இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38