திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Digital Desk 4

03 Feb, 2020 | 07:06 PM
image

திருகோணமலை மாவட்டத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் சங்கத்தினர், திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்குக்கு முன்னால், இன்று (03)  கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மேற்படி சங்கத்தின் தலைவி திருமதி ஆஷா தலைமையில், "எம் பிள்ளைகள் எமக்கு வேண்டும்” என்ற தொனிப்பொருளில், அமைதியான முறையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, “காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும்”,  “நாமும் இலங்கை மக்கள்தான், எமக்கும் சுதத்திரம் வேண்டும்”, “எமக்கு சரியான நீதி வேண்டும்”, “எமது பிள்ளைகளை விடுதலை செய்” எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டு சுழற்சி முறைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவுப் தவிர்ப்புப் போராட்டத்தின் ஓர் அங்கமாக 1,071 நாளாக இன்றும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்திலாவது தமக்கான நல்ல தீர்வொன்றை அரசாங்கம் பெற்றுத்தர வேண்டுமென, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21