கையடக்கத் தொலைபேசிகளுக்கான மீள் நிரப்பு அட்டைகள் விற்பனை பிரதிநிதி ஒருவரின் முகத்தில் மிளகாய் தூளை தூவி அவரிடமிருந்த சுமார் 860000 ரூபா பெறுமதியான மீள் நிரப்பு அட்டை மற்றும் பணம் கொள்ளையடித்துச்சென்ற  சம்பவம் ஒன்று ரிகில்லகஸ்கட பொலிஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கையடக்க தொலைபேசிகளுக்கான பணம் மீள் நிரப்பும் கட்டண அட்டைகள் விற்பனை நிலையம் ஒன்றின் விற்பனை பிரதி நிதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் விற்பனை நிலையங்களுக்கு விற்பனை செய்வதற்காக ஹங்குரன்கெத்த, ரிகில்லகஸ்கட  பிரதேசங்களுக்கு சென்றுள்ளார். 

நேற்று  மாலை 4.00 மணியளவில் வீதியில் சென்று கொண்டிருந்தபோது இவரது மோட்டார் சைக்கிள் செயலிழந்துள்ளது.

இதனை தள்ளிக்கொண்டு சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இப்பிரதிநிதியின்  முகத்தில் மிளகாய்ப்பொடியைத் தூவி விட்டு அவரிடமிருந்த பையை  கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.