கொரோனா..: சீனாவின் புதிய ஏற்­று­மதி

Published By: J.G.Stephan

03 Feb, 2020 | 03:31 PM
image

1980களில், எச்.­ஐ.வி தீவி­ர­மாகப் பரவிக் கொண்­டி­ருந்த கால­கட்­டத்தில், ஆபி­ரிக்க நாடு­களில் இருந்து வரு­வோரை எவ்­வாறு அச்­சத்­துடன் பார்க்­கப்­படும் சூழல் இருந்­ததோ, அது­போ­லவே, சீனாவில் இருந்து வரு­வோரை அச்­சத்­துடன் பார்க்­கின்ற நிலை இன்று உல­கெங்கும் உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

தீவி­ர­மாகப் பரவத் தொடங்­கி­யி­ருக்­கின்ற கொரோனா வைரஸ்  தான் இந்த நிலை­மைக்குக் காரணம்.

சீனா­விலும் தாய்­லாந்து உள்­ளிட்ட சில தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளிலும் கொரோனா வைரஸ் தீவி­ர­மாகப் பர­விய போதும், இந்­தி­யாவைக் கடந்து அது இலங்­கை­யையே முதலில் வந்­த­டைந்தது.

அதற்குக் காரணம், இலங்­கைக்கும் சீனா­வுக்கும் இடையில் காணப்­பட்ட நெருங்­கிய தொடர்­புகள் தான்.

பொரு­ளா­தார, அர­சியல் தொடர்­பு­க­ளுக்கு அப்பால், அண்­மைக்­கா­லத்தில் சீனா­வுக்கும் இலங்­கைக்கும் ஏற்­ப­டுத்­தப்­பட்ட சுற்­றுலாத் துறை வளர்ச்­சியும் இன்று கொரோனா வைரஸ் அச்­சு­றுத்­தலை பெருகச் செய்­தி­ருக்­கி­றது.

21/4 தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்னர் இலங்­கையின் சுற்­றுலாத் துறை பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்தப் பாதிப்பிலிருந்து இலங்கை மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்­டி­ருந்த சூழ்­நி­லையில் தான் கொரோனா வைரஸ் அச்­சு­றுத்தல் தோன்­றி­யி­ருக்­கி­றது.

இதனையடுத்து, சீனாவில் கல்வி கற்கும் இலங்கை மாண­வர்கள் திருப்பி அழைக்­கப்­ப­டு­கின்­றனர். சீனாவில் இருந்து வரும் சுற்­றுலாப் பய­ணிகள் தீவி­ர­மாகக் கண்­கா­ணிக்­கப்­ப­டு­கின்­றனர்.

இலங்­கையில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான சீனர்கள், சீன முத­லீட்டில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற பல்­வேறு அபி­வி­ருத்தித் திட்­டங்­களில் பணி­யாற்­று­கி­றார்கள். அவர்­களை விட இலங்­கையின் சுற்­றுலாத் துறைக்கு தோள்­கொ­டுக்கும் வகையில், சீனா கணி­ச­மான சுற்­றுலாப் பய­ணி­களை அனுப்­பியும் வரு­கி­றது.

2019ஆம் ஆண்டில் சீனாவில் இருந்து 167,863 சுற்­றுலாப் பய­ணிகள் கொழும்­புக்கு வந்­தி­ருந்­தனர். அதற்கு முன்­னைய ஆண்டில், 265,965 சுற்­றுலாப் பய­ணிகள் சீனாவில் இருந்து வந்­தனர்.

21/ 4 தாக்­கு­தல்­க­ளினால் இலங்கைக்கு வரும் சீன சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்­கையில் கடந்த ஆண்டு குறைவு ஏற்­பட்­டி­ருந்த போதும் இந்த ஆண்டில் புதி­ய­தொரு வளர்ச்சி எதிர்­பார்க்­கப்­பட்டு வந்­தது.

 அதுவும் இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு சீனா­வுக்கு மிகவும் நெருக்­க­மான கோத்­த­ாபய ராஜ­பக் ஷ அர­சாங்கம் பத­விக்கு வந்­துள்ள சூழலில், கூடுதல் சுற்­றுலாப் பய­ணி­களை இலங்­கைக்கு சீனா அனுப்பும் என்ற நம்­பிக்கை கொழும்­பிடம் ஏற்­பட்­டி­ருந்­தது.

 ஆனால் இந்த ஆண்டின் தொடக்­கத்­தி­லேயே கொரோனா வைரஸ் பரவத் தொடங்­கி­யி­ருப்­பது, இலங்கை – -சீனா இடை­யி­லான சுற்­றுலா துறை உற­வு­க­ளுக்கு பேரி­டி­யாக அமைந்­தி­ருக்­கி­றது.

 இலங்கை வரும் சீன சுற்­றுலாப் பய­ணிகள் இங்கு அச்­சத்­துடன்  பார்க்­கப்­ப­டு­கின்­றனர்.  கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் தொடங்கி  அவர்கள் போகின்ற எல்லா இடங்­க­ளிலும்  சோத­னை­க­ளையும் நெருக்­க­டி­களையும் எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது. சீனர்­களை இலங்­கை­யர்கள் அச்­சத்­துடன் பார்க்­கின்ற சூழ­லினால் தான்,  கொழும்­பி­லுள்ள சீனத் தூத­ரகம், அச்சம் அடைய வேண்டாம் என்று  அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தது.

 ஆனால் தற்­போ­தைய சூழ்­நி­லையில் தூத­ர­கத்தின் அறிக்­கையை நம்பக் கூடிய நிலையில் இலங்­கை­யி­லுள்ள மக்கள் இல்லை.  உண்­மையும்  பொய்­யு­மாக பரவிக் கொண்­டி­ருக்கும்  வதந்­திகள்  தான், மக்­களின் கவ­னத்தைப் பெறு­கின்றன.

கொரோனா வைரஸ்  குறித்து பீதி­ய­டைய வேண்டாம் என்று கூறு­கின்ற அறிக்­கை­களை விட,  இந்த நோயினால் இத்­தனை பேர் பாதிக்­கப்­பட்டு விட்­டனர் என்று வெளி­யா­கின்ற வதந்­தி­களைத் தான் மக்கள் அதிகம் ஆர்­வத்­துடன் அறிந்து கொள்­கி­றார்கள்.

விமான நிலையம் உள்­ளிட்ட இடங்­களில் சற்று சந்­தே­கத்­துக்­கு­ரிய காய்ச்­ச­லுடன் வரு­ப­வர்கள் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டுத்­து­வ­தற்­காக தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். 

அவர்­க­ளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட முன்­னரே,  கொரோனா வைர­ஸுடன் வந்­த­வர்கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக ஊட­கங்­களில் செய்­திகள் பரவிக் கொண்­டி­ருக்­கின்­றன.

சாதா­ரண காய்ச்சல் கார­ண­மாக அதிக உடல் வெப்பம்,  சளி போன்ற அறி­கு­றி­க­ளுடன் வரு­ப­வர்­களை கூட கொரோனா  வைரஸ் காவி­களாக அடை­யா­ளப்­ப­டுத்தும் நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.  இது சீனர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்பு மாத்­தி­ர­மல்ல இலங்­கை­யர்­க­ளுக்கும் கூட இதே நிலை தான்.

இலங்­கைக்கு வரும் சீன சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்கு சோதனை கெடு­பிடிகள் அதி­க­ரிக்கும் போதும்,  சீனாவே தமது நாட்­ட­வர்­களை தனி­மைப்­ப­டுத்த முற்­ப­டு­கின்ற போதும், இலங்­கையின் சுற்­றுலாத் துறையில் அது பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும்.

2018 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு இலங்­கைக்கு வந்த சீன சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட ஒரு இலட்­சத்­தினால் குறைந்­தி­ருந்­தது. அதற்கு மிக­முக்­கி­ய­மான கார­ணி­யாக 21/ 4 தாக்­குதல் தான் கூறப்­பட்­டது.

இந்த ஆண்டு தொடக்­கத்­தி­லேயே கொரோனா வைரஸ் கார­ண­மாக சீன சுற்­றுலாப் பய­ணி­களின் வருகை சரியும் ஆபத்து ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

நோய் பர­வு­கின்ற ஆபத்தும், இலங்­கையில் சீனர்கள் குறித்த அச்­சமும் இதே போக்கில் தொட­ரு­மானால், இந்த ஆண்டில் இலங்­கையின் சுற்­றுலாத் துறையில் சீனாவின் பங்­க­ளிப்பு பெரிதும் வீழ்ச்சி கண்டு விடும்.

2018 ஆம் ஆண்டு இலங்­கைக்கு அதிக சுற்­றுலாப் பய­ணி­களை அனுப்­பிய நாடு­களின் பட்­டி­யலில் சீனா இரண்டாம் இடத்தில் உள்­ளது.  கடந்த ஆண்டு மூன்றாம் இடத்­துக்கு தள்­ளப்­பட்டு விட்­டது. 

இந்த ஆண்டில் கொரோனா வைரஸ்,  எந்த நிலைக்கு கொண்டு செல்லப் போகி­றது என்­பதை,  இந்த நோய் பர­வு­கின்ற மற்றும் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற சூழலை பொறுத்தே அமையும்.

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில்,  கொரோனா வைரஸ்  பாதிப்பு,  சுற்­றுலாத் துறைக்கு மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்­த­லாக மாறி விட்­டது. தனியே சீன சுற்­றுலாப் பய­ணி­களின்  வரு­கை­யினால் மாத்­திரம் இந்த நிலை ஏற்­பட்டு விடும் என்று இல்லை.

இந்த நோய் பர­விய  நாடு­களின் முதற்­கட்ட பட்­டி­ய­லி­லேயே இலங்­கையும் இடம் பெற்­று­விட்­டது.  

அதை­விட சீனர்­களின் நட­மாட்டம் அதி­க­முள்ள நாடு­களில் ஒன்­றாக இலங்கை இருப்­பது சர்­வ­தேச அளவில் அறி­யப்­பட்ட ஒன்று.

இலங்­கையில் சீனாவின் தலை­யீ­டுகள், நட­மாட்­டங்கள் அதி­க­ரித்து விட்­ட­தாக அண்­மையில் கூட,  குறிப்­பாக ஆட்சி மாற்­றத்தின் பின்னர் சர்­வ­தேச ஊட­கங்­களில் அதி­க­ளவு செய்­திகள் வெளி­வந்து கொண்­டி­ருந்­தன.

இவை இலங்­கை-­ – சீன உற­வு­களின் நெருக்­கத்தை ஓர­ள­வுக்­கா­வது பிர­ப­லப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. 

இவ்­வா­றா­ன­தொரு சூழலில் மேற்­கு­லக நாடு­களில் இருந்தும் ஏனைய நாடு­க­ளி­ல் இ­ருந்தும் இலங்­கைக்கு வரும் சுற்­றுலாப் பய­ணிகள் கூட, தமது பயணத் திட்­டங்­களை மாற்­றி­ய­மைக்க யோசிக்கும் நிலை தோன்­றி­யி­ருக்­கி­றது.

பாதிப்பு ஏற்­பட்­டி­ருக்கும் நாடு­களில் ஒன்­றாக இலங்கை இருப்­பது மாத்­தி­ர­மன்றி, சீனர்­களின் பிர­சன்னம் அதி­க­முள்ள நாடு­களில் ஒன்­றா­கவும் இருப்­பதால் சுற்­றுலாப் பய­ணிகள் இலங்­கையை தெரிவு செய்­வதை தவிர்க்கக் கூடும்.

ஒட்­டு­மொத்த இலங்­கையின் சுற்­றுலாப் பய­ணத்­து­றைக்கு இது பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும்.

அர­சியல் ரீதி­யா­கவும் இந்த நோய் தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தக் கூடிய நிலை­யி­லேயே இருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இன்னமும் சீனாவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை. அவர் கடந்த மாதம் சீனா செல்வதாக இருந்தது.  எனினும் பல்வேறு பயணத்திட்ட குழப்பங்களால் அது சாத்தியப்படவில்லை.

இந்த மாதம் அவர் சீனாவுக்கு செல்வது பெரும்பாலும் உறுதியாகவே இருந்து வரும் சூழலில், கொரோனா  வைரஸ்  அவரது பயணத் திட்டத்துக்குள் நுழைந்து மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் தோன்றியிருக்கிறது.

இந்தப் பயணத் திட்டத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டால், தற்போதைய அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்கான வாய்ப்புகளும் பின்தள்ளப்படும் சூழலே தென்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54