பிராந்திய அரசியல்: மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆபத்­தா­னது

Published By: J.G.Stephan

03 Feb, 2020 | 03:24 PM
image

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் தலை­மை­யி­லான புதிய அர­சாங்கம் இது வரைக்கும் நாட்­டி­லுள்ள இனப் பிரச்­சி­னைக்கு எத்­த­கை­ய­தொரு தீர்­வி­னையும் முன்வைக்­க­வில்லை. நாட்டில் இனப் பிரச்­சி­னை­யில்லை என்­ற­ தொரு தோற்­றப்­பாட்­டையே வெளிப் ­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அதி­ரடி நட­வ­டிக்­கை­களின் மூல­மாக நாட்டு மக்­க­ளி­டையே ஜனா­தி­பதி வர­வேற்பை பெற்­றுள்ளார். ஆனால், அந்த நட­வ­டிக்­கைகள் சிறு­பான்­மை­யி­னரின் பிரச்­சி­னைக்கு தீர்­வினைக் கொண்டு வரும் என்று சொல்ல முடியாது.

 சிங்­கள மக்­களின் பெரும்­பான்­மை­யான வாக்­கு­க­ளினால் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ வெற்றி பெற்­றுள்ளார் என்­ப­தற்­காக சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­களை ஒதுக்கி வைக்க முடி­யாது. மஹிந்த  ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த போதும் இனப் பிரச்­சி­னைக்கு தீர்வு முன்வைக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. அதற்­காக பேச்­சுக்­களும் நடை­பெற்­றன. இதன் மூல­மாக நாட்டில் இனப் பிரச்­சி­னை­யுள்­ளது என்­பது ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது. தற்­போது பிர­த­ம­ராக மஹிந்த  ராஜ­பக் ஷ உள்ள நிலையில் சிறு­பான்­மை­யி­னரின் பிரச்­சி­னைக்கு தீர்­வினை முன்வைப்­பது அவ­சி­ய­மாகும். அப்­போ­துதான் சிறு­பான்­மை­யி­ன­ரி­டையே காணப்­படும் தப்­பான எண்­ணங்­களை இல்­லாமல் செய்­யலாம். 

அதன் மூல­மாக சிறுபான்­மை­யி­னரின் ஆத­ர­வையும் பெரு­வா­ரி­யாக பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், ஜனா­தி­பதியும், அர­சாங்­கமும் இதனை கருத்திற் கொள்­ளாது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆச­னங்­களை வெற்றி கொள்ள வேண்­டு­ மென்று மக்­க­ளுக்கு தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். அதற்­கான சகல வித­மான நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றார்கள்.

நல்­லாட்சி எனும் பேரில் நடை­பெற்ற ஆட்­சியில் ஜனா­தி­ப­தி­யாக செயற்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும், பிர­த­ம­ராக இருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் இடையே அதி­காரப் போட்­டிகள் காணப்­பட்­டன. இதனால், நாட்டில் ஒரு ஸ்திர­மான ஆட்­சியை நடத்த முடி­ய­வில்லை. ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை மண்­டி­யிடச் செய்ய வேண்­டு­மென்­ப­தற்­காக மைத்­தி­ரி­ பால சிறி­சேன பல நட­வ­டிக்­கை­களை எடுத்தார். அந்த நட­வ­டிக்­கை­க­ளினால் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை மண்­டி­யிடச் செய்ய முடி­ய­வில்லை. இதற்கு மாற்­ற­மாக நாட்டில் அர­சியல் ஸ்திரம் பாதிக்­கப்­பட்­டது. அது பொரு­ளா­தா­ரத்தில் எதிர் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. அர­சாங்கம் குறித்து மக்­க­ளி­டை­யே­ கடும் அதி­ருப்தி  ஏற்­பட்­டது. இதனால், மஹிந்த  ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது­ஜன பெர­முன சிங்­கள மக்­க­ளி­டையே அதிக ஆத­ரவைப் பெற்றுக் கொண்­டது. பொது­ஜன பெர­மு­ன­வினர் அர­சாங்­கத்தின் இந்த நிலையை கையில் எடுத்துக் கொண்டு செயற்­பட்­டார்கள். இதேவேளை, நல்­லாட்சி அர­சாங்கம் இனப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு பல நட­வ­டிக்­கை­களை எடுத்­தது. அதற்கு பௌத்த இன­வா­தி­களும், இன­வாதத் தேரர்­களும் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக போர்க்கொடி தூக்­கி­னார்கள். இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளி­னாலும் பொது­ஜன பெர­முன அர­சியல் ரீதி­யாக நன்­மை களை அடைந்­தது.  இத­னி­டையே ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் தலை­மைத்­துவப் போட்டி ஏற்­பட்­டது. அக்­கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்­பதில் இழு­ப­றிகள் இருந்­தன.

இவ்­வா­றான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளி­னதும் இறுதி பெறு­பே­றாக ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜ­பக் ஷ வெற்றி பெற்றார். கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின் வெற்­றிக்கு சிறு­பான்­மை­யினர் அதிக ஆத­ரவைக் கொடுக்­க­வில்­லை­என்­பது அறிந்­ததே. ஆயினும், பௌத்த இன­வாத அமைப்­புக்­களின் ஆத­ரவு இருந்­தது. சிங்­கள மக்­களின் ஆத­ரவை பெற்றுக் கொள்­வ­தற்­காக பௌத்த மதமும், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களும், சஹ்ரான் குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை தாக்­கு­தல்­களும் ஜனா­தி­பதித் தேர்­தலில் செல்­வாக்குச்  செலுத்­தின. இந்த பின்­ன­ணியை வைத்தே மீண்டும் பாரா­ளு­மன்றத் தேர்­தலை எதிர்கொள்­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா பய ராஜ­பக் ஷ வெற்றி பெற்­றுள்ள போதிலும், அவ­ரிடம் நிறை­வேற்று அதி­காரம் பூர­ண­மா­க­யில்லை. அரை­குறை நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் கொண்­ட­தொரு பத­வி­யாக ஜனா­தி­ப­தி ­ப­த­வியை மாற்­றி­ய­மைத்­துள்­ளார்கள். அர­சியல் யாப்பில் மேற்­கொள்­ளப்­பட்ட 19ஆவது திருத்­தத்தின் மூல­மா­கவே ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்­திற்கு மூக்­கணாங் கயிறு கட்­டப்­பட்­டுள்­ளது.

தனது அதி­கா­ரத்­திற்கு மூக்­கணாங் கயிறு கட்­டப்­பட்­டுள்­ளதை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­க் ஷவும், அவரை சார்ந்­த­வர்­களும் விரும்­ப­வில்லை. நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­து­வதில் உள்ள சட்ட ரீதி­யான தடை­களை அகற்ற வேண்­டு­மென்று எண்­ணு­கின்­றார்கள். பிர­த­ம­ராக மஹிந்த ராஜ­பக் ஷ உள்ள நிலையில் ஜனா­தி­பதி கோத்­தா­பய­வுக்கு நிறை­வேற்று அதி­கா­ரங்கள் செல்ல வேண்­டு­மென்­பதன் மூல­மாக எதிர் காலத்தில் பிர­தமர் பத­வியை அதி­கா­ரங்கள் குறைந்­த­வொன்­றாக மாற்­ற வுள்ளார்கள்.

இதனால் தான் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பொது­ஜன பெர­முன  மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பெற்றுக் கொள்ள வேண்­டு­மென்று திட்­டங்­களை வகுத்­துள்­ளது. ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­ஜன பெர­முன வெற்றி பெற்ற போதிலும், பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் பொது­ஜன பெர­முன வெற்றி கொள்ள வேண்­டி­யுள்­ளது. பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பொது­ஜன பெர­முன தோல்­விய­டை­யு­மாயின், ஆட்­சியை அமைத்துக் கொள்ள முடி­யாத நிலைக்கு அக்­கட்சி தள்­ளப்­படும். ஜனா­தி­பதித் தேர்­தலில் பெற்ற வெற்­றியின் மகிழ்ச்சி அப்­போது துன்­ப­மா­கி­விடும்.

இங்கு பொது­ஜன பெர­முன பாரா­ளு­ மன்றத் தேர்­தலில் வெற்றி பெற வேண்­டு ­மென்­ப­தற்கு அப்பால் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை அடை­ய­ வி­ரும்­பு­வதில் உள்ள ஆபத்தைப் பற்றி நாம் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பெற்றுக் கொள்­வது மிகப் பெரிய ஆபத்­தாகும். எதிர்க்­கட்சி பல­வீ­னப்­பட்­டு­விடும். எதிர்க்­கட்சி பல­வீ­ன­மாக இருக்கும் நிலையில், ஆளுங் கட்­சி­யையும், அதன் தலை­மை­யையும் சர்­வ­தி­கா­ரத்­திற்குள் இழுத்துச் சென்­று­விடும்.

இலங்கை சுதந்­திரம் அடை­வ­தற்கு முன்­ன­தா­கவே பௌத்த இன­வா­திகள் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்­டுள்­ளார்கள். பல தட­வைகள் ஜன­நா­ய­கத்தை சிதைத்­துள்­ளார்கள். ஆட்சி அதி­கா­ரத்திலிருந்த அர­சாங்­கங்கள் அத்­த­கைய ஜன­நா­யக விரோத நட­வ­டிக்­கைகளை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பதி­லாக ஊக்­கப்­ப­டுத்தும் வகை­யி­லேயே செயற்­பட்­டுள்­ளார்கள். அர­சாங்­கங்­களும் பல தட­வைகள் அதி­கா­ரத்தை எப்­ப­டியும் பயன்­ப­டுத்திக் கொள்­ள­லா­மென்ற இறுமாப்பில் ஜன­நா­யக விரோத செயற்­பா­டு­களில் ஈடு­பட்­ட­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. அர­சாங்­கத்­திற்கு பாரா­ளு ­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யில்­லாத வேளை­க­ளிலும் சர்­வ­தி­காரத் தோர­ணையில் ஆட்­சியை நடத்­தி­யுள்­ளார்கள்.

மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யில்­லாத ஆட்­சியும், அதி­கா­ரமும் உள்ள நிலையில் ஜன­நா­யக விரோ­த­மாக செயற்­பட்­டுள்­ள­துடன், சிறு­பான்­மை­யி­னரின் அர­சியல், பொரு­ளா­தாரம், கலா­சாரம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ரா­கவும், அவர்­களின் பூர்­வீகக் காணி­களை கூட பறித்தும் இன­வெ­றி­யாட்டம் மேற்­கொண்­டுள்­ளார்கள். சிங்­கள மக்­களின் நலன்­களில் மாத்­திரம் அக்­க­றை­யுடன் செயற்­பட்ட அர­சாங்­கங்கள், தமது செயற்­பா­டு­களின் மூல­மாக சிறு­பான்­மை­யி­னரை முற்­றாக ஒதுக்கி வைத்­தார்கள் என்று சொல்­வ­து தான் சாலப் பொருத்தமாகும்.

இத்­த­கை­ய­தொரு நிலை இலங்கை சுதந்­திரம் பெற்ற காலம் முதல் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த நிலை­யில் தான், 1977ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து வீத ஆச­னங்­களைப் வெற்றி கொண்­டமை மிகப் பெரிய ஆபத்தை நாட்­டிற்கு ஏற்­ப­டுத்­தி­யது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ஜே.ஆர்.ஜய­வர்­தன தமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்­றியை பயன்­ப­டுத்தி 1972ஆம் ஆண்டு யாப்பை ஒதுக்கி வைத்­து­விட்டு, புதிய அர­சியல் யாப்பு ஒன்­றினை 1978ஆம் ஆண்டு கொண்டு வந்தார்.

 பாரா­ளு­மன்­றத்தில் தனக்­குள்ள மூன்றில் இரண்­டுக்கும் அதி­க­மான ஆத­ரவைப் பயன்­ப­டுத்தி தம்மை ஜனா­தி­பதி என்று பிர­க­ட­னப்­ப­டுத்­தினார். அர­சியல் யாப்பின் மூல­மாக ஜனா­தி­ப­திக்கு யாராலும் தடை செய்ய முடி­யாத நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொண்டார். அதுமட்­டு­மன்றி சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்தி தமது ஆட்சிக் காலத்தை மேலும் ஆறு வரு­டங்­க­ளுக்கு நீடிக்கச் செய்தார். தமது கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம்  திக­தி­யி­டப்­ப­டாத இரா­ஜி­னாமா கடி­தங்­களைப் பெற்றுக் கொண்டு, ஒரு சர்­வ­தி­காரி போன்று செயற்­பட்டார். தமி­ழர்­களின் கோரிக்­கை­களை நசுக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டார். முஸ்­லிம்­களை கவ­னத்திற் கொள்­ளாது செயற்­பட்டார்.

தொகு­தி­வாரி தேர்தல் முறைக்கு பதி­லாக விகி­தா­சார தேர்தல் முறையை கொண்டு வந்தார். பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு 12.5 வீத வாக்களிப்பு வீதத்தை கொண்டு வந்தார். இதன்போது விகி­தா­சார தேர்தல் முறை சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும், சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­து­வத்தில் வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்தும் என்று சுட்டிக் காட்­டப்­பட்­டது. தொகு­தி­வா­ரியை விடவும் விகி­தா­சார தேர்தல் முறை சிறு­பான்­மை­யி­னருக்கு அவர்­களின் பிர­தி ­நி­தியை பெற்றுக் கொள்­வ­தற்கு இல­கு­வாக இருக்கும். மாவட்ட மட்­டத்தில் சிறு­பான்­மை­யினர் ஒரு கட்சி அல்­லது ஒரு குழு­வாக தனித்து செயற்­படும் போது தங்­க­ளுக்­கு­ரிய பாரா­ளு­மன்ற  பிர­தி ­நிதியை பெற்றுக் கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் அன்­றைய தலை­வர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எடுத்து சொன்­னார்கள்.

விகி­தா­சாரத் தேர்தல் முறையில் முஸ்­லிம்­களின் வாக்­கு­களை ஒரு கட்­சிக்கு அளித்­தால்தான் பாரா­ளு­மன்ற பிர­தி ­நி­தியை பெற்றுக் கொள்­ள­லா­மென்­ப­தற்­கா­கவும், முஸ்­லிம்­களின் உரி­மைகள் பற்றி பேசு­வ­தற்­கா­கவும் முஸ்லிம் காங்­கிரஸ் ஆரம்­பிக்­கப்­பட்­டது. முஸ்லிம் காங்­கிரஸ் ஆரம்­பிக்­கப்­பட்ட போது அதனை இன­வாதக் கட்சி என்­றார்கள். தங்­களின் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தியை ஒரு கட் சி­யாக அல்­லது குழு­வாக தனித்து நின்று தேர்­தலில் போட்­டி­யிடும் போது பெறலாம் என்று தெரி­வித்­த­வர்­களே முஸ்­லிம்­க­ளுக்கு அர­சியல் கட்சி அவ­சிய­மில்லை என்று மிகப் பெரி­ய ளவில் இன­வா­தத்தைப் பரப்­பி­னார்கள்.

விகி­தா­சாரத் தேர்தல் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்று கரு­தப்­பட்­டது. இதனால், முஸ்லிம் கட்­சிகள் பேரி­ன­வாதக் கட்­சி­க­ளுடன் இணைந்து போட்­டி­யிட்டு பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­களைப் பெற்­றன. ஆட்­சியை அமைப்­ப­தற்கு நிபந்­த­னை­களை விதித்து தாம் நினைத்­ததை சாதித்துக் கொண்­டன. இப்­போது விகி­தா­சாரத் தேர்தல் முறை வேண்­டா­மென்று தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இத்­தேர்தல் முறையின் கீழ் ஆட்­சியை தீர்­மா­னிக்­கின்­ற­வர்­க­ளாக சிறு­பான்­மை­யினர் இருப்­ப­தனை அனு­ம­திக்க முடி­யா­தென்று தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். புதிய கலப்புத் தேர்தல் முறையை அல்­லது தொகு­தி­ வாரி முறையைக் கொண்டு வரு­வ­தற்கும், தொகு­தி­க­ளுக்கு புதிய எல்­லை­களை தீர்­மா­னிப்­ப­தற்கும் திட்­டங்­களை வகுத்­துள்­ளார்கள். உள்­ளூராட்சி சபைத் தேர்­தலை கலப்பு முறையில் நடத்­தி­யுள்­ளார்கள். இத்­தேர்தல் முறையால் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளி­யே­யுள்ள முஸ்­லிம்­களும், தமி­ழர்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­து­வத்தை இல்­லாமல் செய்­வ­தற்­கேற்ற வகையில் வட்­டா­ரங்­களின் எல்­லை­களை அமைத்­துள்­ளார்கள்.

இவ்­வாறு சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக அர­சியல் யாப்­புக்கள் மூல­மாக வும், அர­சாங்­கத்தின் அதி­கா­ரங்­களின் மூல­மா­கவும், ஜன­நா­யக விரோத செயற்­பா­டு­களி­னாலும் பல நட­வ­டிக்­கை­களை ஆட்­சி­யா­ளர்கள் எடுத்து வந்­துள்­ளார்கள். தற்­போதும் கூட அத்­த­கைய நட­வ­டிக்­கை­களே தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. விஜே­தா­ஸ­வினால் முன்வைக்­கப்­பட்­டுள்ள 12.5 வீத வாக்களிப்பு வீதத்தை மீண்டும் கொண்டு வர வேண்­டு­மென்ற தனி­நபர் பிரே­ரணை, முஸ்­லிம்­களின் திரு­மணச் சட்­டத்தை இல்­லாமல் செய்ய வேண்­டு­மென்­ப­தற்­காக அத்­து­ர­லியே ரத்ன தேர­ரினால் முன் வைக்கப்­பட்­டுள்ள தனி­நபர் பிரே­ர­ணைகள் போன்­றன சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக தொடரும் நட­வ­டிக்­கை­க­ளாகும்.

மேலும், கேகாலை மாவட்­டத்தில் நெலுந்­தெ­னிய உடு­கும்­புற எனும் இடத்­தி­லுள்ள பள்­ளி­வாசல் வளா­கத்­திற்கு அருகே சில வாரங்­க­ளுக்கு முன்னர் புத்தர் சிலை ஒன்று சட்ட விரோத­மாக நள்ளி­ரவு வேளையில் வைக்­கப்­பட்­டது. இதனை அப்­பி­ர­தேச முஸ்­லிம்­களும், பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் ஏற்றுக் கொள்­ள­ வில்லை. பொலிஸில் முறைப்­பாடு செய்­தார்கள். இறு­தியில் நீதி­மன்­றத்­திற்கு சென்­றது. இப்­பி­ரச்­சி­னையில் இப்­பி­ர­தேச முஸ்­லிம்கள் நீதியை கோரினால் தங்­க­ளுக்கு பெரும்­பான்­மை­யி­னத்­தி­லுள்ள இன­வா­தி­க­ளினால் ஆபத்­துக்கள் ஏற்­ப­டலாம் என்று அச்சம் கொண்­டார்கள். இதனால், புத்தர் சிலையை அகற்­று­வ­தில்லை என்றும், புத்தர் சிலையை சுற்றி மதில் அமைப்­பது என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. முஸ்­லிம்­களின் இந்த விட்டுக் கொடுப்பால் பிரச்­சி­னைக்கு தீர்வு வந்­தாலும் அது நிரந்தர தீர்­வாகக் கொள்ள முடி­யுமா என்­பதில் உறு­தி­யில்லை. இப்­போ­தைக்கு புத்தர் சிலையை சுற்றி மதில் அமைத்­தாலும், எதிர்காலத்தில் அங்கு ஒரு பௌத்த விகா­ரையை அமைக்­க­ மாட்­டார்கள் என்­ப­தற்கு உத்­த­ர­வாதம் அளிக்­கப்­ப­ட­வில்லை. அவ்­வாறு அமை­யு­மாயின் இப்­பி­ர­தே­சத்தின் அமை­திக்­காக முஸ்­லிம்கள் செய்த விட்டுக் கொடுப்­புக்கு அர்த்­த­மில்­லாது போய்­விடும். சில வேளை­களில் பௌத்த இன­வா­திகள் பள்­ளி­வா­சலின் இருப்பைக் கூட கேள்­விக்­குட்­ப­டுத்­தலாம். அது மட்­டு­ மல்­லாது சட்­ட­வி­ரோத புத்தர் சிலை வைப்பின் மூல­மாக, அங்கு பள்­ளி­வாசல் அமைந்­தி­ருப்­ப­தனை சிலை வைத்­த­வர்கள் விரும்ப­வில்லை என்று கூட சந்­தே­கிக்­கலாம். ஒரு இனக் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தக் கூட சிலையை வைத்­தி­ருக்­கலாம். அதேபோன்று முஸ்­லிம்கள் விட்டுக் கொடுப்­புடன் நடந்­துள்ள போதிலும், இந்த விட்டுக் கொடுப்பை ஏற்றுக் கொள்­ளாத முஸ்­லிம்­களும் இருப்­பார்கள். அதனால், எந்த வேளை­யிலும் இவ்­வ­ிரு ­சா­ராரும் அமை­திக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை மேற்கொள்­ளலாம்.

ஆதலால், இதனை விடுத்து அர­சாங்கம் நியா­யத்தைப் பெற்றுக் கொடுத்­தி­ருக்க வேண்டும். இனங்­க­ளுக்கிடையே குழப்­பத்­தையும், மோத­லையும் ஏற்­ப­டுத்தும் வகையில் சட்­டத்­திற்கு புறம்­பாக செயற்­பட்­ட­வர்­களை கைது செய்து நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்க வேண்டும். அங்­கி­ருந்து புத்தர் சிலையை அகற்­று­வ­து தான் நீதி­யாகும். ஆனால், முஸ்­லிம்­களின் விட்டுக் கொடுப்­பினால் சட்­டத்­திற்கு புறம்­பா­ன­தொரு நட­வ­டிக்கை சட்­டத்­திற்­கு­ரி­ய­தாக மாற்­றப்­பட்­டுள்­ளது.

ஆதலால், இன்­றைய அர­சாங்கம் கூட பௌத்த இன­வா­தி­களின் சட்ட விரோத நட­வ­டிக்­கை­க­ளையும் அங்­கீக­ரித்துக் கொண்­டு தான் இருக்­கின்­றது. இதன் மூல­மாக நாட்டை யார் ஆட்சி செய்­தாலும் பௌத்த இன­வா­தி­களின் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக செயற்­பட முடி­யா­துள்­ளது. பௌத்த இன­வாத அமைப்­புக்­களும், தேரர்­களும் அரசியல்வாதிகளின் துணையால் தங்களுக்கென ஒரு சனக் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். இவர்களுக்கு பௌத்த நாடு, பௌத்த மக்கள் என்ற உணர்வு விதைக்கப்பட்டுள்ளது. ஏனைய இனங்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் என்று போலியான விம்பங்கள் காட்டப்பட்டுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிராக செயற்படுவதனை நாட்டுப்பற்று செயலாகக் காட்டப்பட்டுள்ளது. இதனால், ஆட்சியாளர்களினால் பௌத்த இனவாத சிந்தனைக்கு எதிராக செயற்பட முடியாதுள்ளது.

இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் பின்னணியில் தான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார். ஆகவே, மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது ஜே,ஆரின் ஆட்சியையும், அதன் ஒடுக்கு முறை  நடவடிக்கைகளையும் ஞாபகப்படுத்துவதாக இருக்கின்றது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் உள்வாங்கி, முஸ்லிம் கட்சிகளை வற்புறுத்தியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக் ஷ 18ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தார். ஒருவர் எத்தனை முறையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்று திருத்தியமைத்தார். 2015ஆம் ஆண்டு 18ஆவது திருத்தத்தை மாற்றியமைக்கும் வகையிலும், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கும் வகையிலும் 19ஆவது திருத்தச் சட்ட மூலம் கொண்டு வரப்பட்டது. பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளுமாயின் மீண்டும் 18ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் உள்ளவற்றை கொண்டு வருவார்கள். அதனோடு, சேர்த்து வேறு சில சட்டங்களையும் நிறைவேற்றுவார்கள். அதனால்தான் பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும், அழுத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

சஹாப்தீன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48