சிவில் நிர்­வா­கத்தில் இரா­ணுவத் தலை­யீடு...

Published By: J.G.Stephan

03 Feb, 2020 | 03:02 PM
image

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தனது நிர்­வா­கத்தில் முக்­கிய பத­வி­க­ளுக்கு, இரா­ணுவ அதி­கா­ரி­களை தெரிவு செய்­வதும், நிய­மிப்­பதும், இரா­ணுவ ஆட்­சியை நோக்கி நாட்டைக் கொண்டு செல்­வ­தான குற்­றச்­சாட்­டு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தாலும், அந்த முடிவில் அவர் பின்­வாங்­க­வில்லை.

ஜனா­தி­ப­தி­யாக   கோத்­தா­பய ராஜ பக் ஷ பத­விக்கு வந்த பின்னர், முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரிகள் பலர் மீண்டும் அரச நிர்­வா­கத்­துக்குள் உள்­வாங்க ஆரம்­பிக்­கப்­பட்­டனர்.

மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்ன பாது­காப்புச் செய­ல­ராக முதலில் நிய­மிக்­கப்­பட்டார். கடை­சி­யாக, மேஜர் ஜெனரல் நந்த மல்­ல­வ­ராச்சி பல­நோக்கு அபி­வி­ருத்தி செய­ல­ணியின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார். சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் பதவி உள்­ளிட்ட பல பத­வி­க­ளுக்கு முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரிகள் பலர் நிய­மிக்­கப்­படும் வாய்ப்­புகள் இருப்­ப­தாக ஊட­கங்­களில் செய்­திகள் வந்து கொண்­டி­ருக்­கின்­றன.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ பத­வி­யேற்று இரண்டு மாதங்கள் நிறை­வ­டைந்­துள்ள நிலையில், பல்­வேறு உயர் பத­வி­க­ளுக்­கான நிய­ம­னங்­களை மேற்­கொண்­டி­ருந்­தாலும், சில முக்­கி­ய­மான உயர் பத­வி­க­ளுக்­கான நிய­ம­னங்கள் விட­யத்தில், இரா­ணுவப் பின்­னணி கொண்­ட­வர்­க­ளையே தெரிவு செய்­தி­ருக்­கிறார்.

பாது­காப்புச் செயலர் பதவி, தொலைத்­தொ­டர்பு ஒழுங்­க­மைப்பு ஆணைக்­குழு தலைவர் பதவி, அரச புல­னாய்வுச் சேவையின் தலைவர் பதவி, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் அதி­கார சபை தலைவர் பதவி, துறை­முக அதி­கா­ர­சபைத் தலைவர் பதவி, ஜனா­தி­பதி செய­லக பிர­தானி பதவி போன்ற பல பத­வி­க­ளுக்கு முன்னாள் அல்­லது சேவையில் உள்ள இரா­ணுவ அதி­கா­ரி­களே நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

பாது­காப்­புடன் தொடர்­பு­டைய பத­வி­க­ளுக்கு இரா­ணுவப் பின்­னணி கொண்­ட­வர்கள் நிய­மிக்­கப்­ப­டு­வதில், நியா­யப்­பா­டுகள் இருந்­தாலும், அரச நிர்­வாக அமைப்­பு­களில் இரா­ணுவப் பின்­னணி கொண்­ட­வர்­களின் நிய­ம­னங்கள் இடம்­பெற்­றி­ருப்­பது வேறு வித­மான தோற்­றத்­தையே காண்­பிக்கும்.

கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்ட போதே, அவர் ஆட்­சிக்கு வந்தால் இரா­ணுவ நிர்­வாகம் தான் நாட்டில் நடக்கும் என்றும், இரா­ணுவ ஆட்­சிக்குள் நாடு அகப்­படும் என்றும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

கோத்­தா­பய ராஜபக் ஷ அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்­னரும், இரா­ணுவ ஆட்­சிக்குள் நாடு சென்று கொண்­டி­ருக்­கி­றது என்ற விமர்­ச­னங்கள் வந்து கொண்­டி­ருந்­தாலும், அவ்­வா­றான விமர்­ச­னங்­களோ, குற்­றச்­சாட்­டு­களோ கவ­னத்தில் எடுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை.

மேஜர் ஜெனரல் நந்த மல்­ல­வ­ராச்­சியின் நிய­ம­னத்தின் மூலம், அரச நிர்­வா­கத்தில் இரா­ணுவப் பின்­புலம் கொண்­ட­வர்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­படும் விட­யத்தில் ஜனா­தி­பதி கோத்­தா­பய உறு­தி­யாக இருக்­கிறார் என்­பது வெளிப்­டை­யா­கி­யுள்­ளது.

பல­நோக்கு அபி­வி­ருத்தி செய­லணி தான், தற்­போ­தைய அர­சாங்­கத்தின் முக்­கி­ய­மான வேலைத் திட்­டங்­களை முன்­னெ­டுக்க- கண்­கா­ணிக்கப் போகி­றது. அதற்கு பொறுப்­பாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள மேஜர் ஜெனரல் நந்த மல்­ல­வ­ராச்சி, முன்னர் இரா­ணுவத் தலைமை அதி­கா­ரி­யாக இருந்­தவர், சட்டம், ஒழுங்கு அமைச்சு, விளை­யாட்டுத் துறை அமைச்­சு­களின் செய­ல­ரா­கவும் பதவி வகித்­தவர்.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான இறு­திக்­கட்டப் போரை ஆரம்­பித்து வைத்­த­வரும் இவர் தான். 

பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்த போது, பதில் இரா­ணுவத் தள­ப­தி­யாக பணி­யாற்­றிய மேஜர் ஜெனரல் நந்த மல்­ல­வ­ராச்சி தான், 2006இல் மாவி­லாறில் நான்­கா­வது கட்ட ஈழப்­போரை ஆரம்­பித்து வைத்­தவர்.

இரா­ணுவ சேவையின் மீது காட்­டிய அர்ப்­ப­ணிப்­புக்­கான பிர­தி­ப­ல­னா­கவோ அல்­லது அவ­ரது நிர்­வாகத் திற­னுக்­கா­கவோ, பல­நோக்கு அபி­வி­ருத்தி செய­ல­ணியின் பணிப்­பா­ள­ராக அவர் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கலாம்.

எவ்­வா­றா­யினும் அவ­ரது நிய­மனம், முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­களின் ஆதிக்கம் சிவில் நிர்­வாக நட­வ­டிக்­கை­களில் அதி­க­ரிக்­கி­றது என்ற கருத்­தையே வலுப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அதுவும், ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் முக்­கி­ய­மான திட்­ட­மாக கரு­தப்­படும், வரு­மானம் குறைந்த குடும்­பங்­களைச் சேர்ந்த ஒரு இலட்சம் இளைஞர் யுவ­தி­க­ளுக்கு அர­சாங்க வேலை வழங்கும் திட்­டத்தைச் செயற்­ப­டுத்தும் பொறுப்பும் கூட இவ­ரி­டமே வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

பிர­தேச ரீதி­யாக இந்த வேலை­வாய்ப்­புக்­கான நேர்­முகத் தேர்­வு­களில் அரச அதி­கா­ரி­க­ளுடன் இரா­ணுவ அதி­கா­ரி­களும் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர் என்றும் கூறப்­ப­டு­கி­றது.

முற்­றிலும் தகு­தி­யா­ன­வர்­களைக் கண்­ட­றிந்து நிய­ம­னங்­களை மேற்­கொள்­வது தான், ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் இந்த முடி­வுக்குக் காரணம் என்று சொல்­லப்­ப­டு­கி­றது. அதே­வேளை, இன்­னொரு பக்­கத்தில், அரச சிவில் நிர்­வாக கட்­ட­மைப்­பு­களில் இரா­ணுவ ஆதிக்கம் அல்­லது செல்­வாக்­கிற்கு வழி­கோலும் ஆபத்து இருப்­பதை மறந்து விட­லா­காது.

குறைந்த வரு­மானம் பெறும் குடும்­பங்­களைச் சேர்ந்த 1 இலட்சம் பேருக்கு அர­சாங்க வேலை அளிக்கும் திட்­டத்தை செயற்­ப­டுத்தும் பொறி­மு­றைக்குள் இரா­ணுவ அதி­கா­ரி­களை உள்­ள­டக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னோ­டி­யாக இருந்­தவர், மேஜர் ஜெனரல் லறி விஜே­ரத்ன தான்.

யாழ்ப்­பாணக் குடா­நாடு புலி­க­ளிடம் இருந்து 1996ஆம் ஆண்டு கைப்­பற்­றப்­பட்­டதை அடுத்து, வட­ம­ராட்சி பிர­தே­சத்தைக் கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்த இரா­ணு­வத்தின் 524 ஆவது பிரி­கேட்டின் கட்­டளை அதி­கா­ரி­யாக இருந்­தவர் தான் பிரி­கே­டியர் லறி விஜே­ரத்ன.

வட­ம­ராட்­சியில் கைப்­பற்­றப்­பட்ட பிர­தே­சத்தில், புலி­களின் கெரில்லா நட­வ­டிக்­கை­களை முறி­ய­டிப்­ப­தற்­காக அவர் பல்­வேறு  யுக்­தி­களை கையாண்டார். அபி­வி­ருத்தி திட்­டங்கள், மக்­க­ளுடன் நெருங்கிப் பழ­குதல், அர­சாங்க நிய­ம­னங்­க­ளையும் சிவில் நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளையும் கைக்குள் வைத்துக் கொள்­ளுதல், இவை மூன்றும் அவ­ரது பிர­தான யுக்­தி­க­ளாக இருந்­தன.

அப்­போது யாழ்ப்­பா­ணத்தில் அர­சியல் கட்­சிகள் பெரி­தாக செயற்­ப­டு­கின்ற நிலையில் இருக்­க­வில்லை என்­பதும், குடா­நாட்­டுக்கு வெளியே தான் புலி­க­ளுடன் போர் நடந்து கொண்­டி­ருந்­தது என்­பதும் அவ­ருக்கு சாத­க­மா­ன­தாக இருந்­தது.

சந்­தி­ரிகா குமா­ர­துங்க அர­சாங்­கத்­தினால் அப்­போது அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட சமுர்த்தி திட்டம், யாழ்ப்­பாண மாவட்­டத்­தி­லேயே முதன்­மு­தலில் வட­ம­ராட்சிப் பகு­தியில் தான் கொண்டு வரப்­பட்­டது.

சமுர்த்தி அதி­கா­ரி­களை தெரிவு செய்­வது, நிய­மனம் செய்­வது எல்­லா­வற்­றையும் அப்­போது, வட­ம­ராட்சிப் பகு­திக்குப் பொறுப்­பான அதி­கா­ரி­யாக இருந்த மேஜர் ஜெனரல் லறி விஜே­ரத்­னவே தனது பொறுப்பில் மேற்­கொண்டார்.

அது அவ­ருக்கும் புதிய நிய­ம­னங்­களைப் பெற்­ற­வர்­க­ளுக்கும் இடையில் ஒரு பிணைப்பை ஏற்­ப­டுத்­தி­யது. அதுவே அவர் மீது புலிகள் கரும்­புலித் தாக்­குதல் நடத்­து­வ­தற்கும் கார­ண­மாக அமைந்­தி­ருந்­தது.

அர­சாங்க நிய­ம­னங்­களில் இரா­ணுவ அதி­கா­ரி­களின் தலை­யீ­டுகள் என்­பது இன்று நேற்று பரீட்­சிக்­கப்­பட்ட அல்­லது ஆரம்­பிக்­கப்­பட்­ட­தல்ல. அது 1996 -97 இலேயே தொடங்கி விட்­டது.

அது­போல, வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் ஆளு­நர்­க­ளாக பணி­யாற்­றிய இரா­ணுவ அதி­கா­ரி­களும் கூட அரச நிய­ம­னங்கள், நிர்­வா­கங்­களில் தலை­யீ­டு­களைச் செய்­ப­வர்­க­ளா­கவே இருந்து வந்­தனர்.

அந்த தலை­யீ­டுகள் அப்­போது உயர்­மட்­டத்தில் இருந்­தது, ஆனால், அது இப்­போது பிர­தேச மட்டம் வரை கொண்டு செல்­லப்­படப் போகி­றது. இது இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் பிர­தே­சத்தில் உள்ள மக்­க­ளுக்கும் இடை­யி­லான தொடர்­பா­டலை அதி­க­ரிக்கும்.

அதே­வேளை, சிவில் நிர்­வாக நட­வ­டிக்­கை­களில் இரா­ணுவத் தலை­யீ­டுகள் என்ற வலு­வான குற்­றச்­சாட்­டுகள் எழும்­பவும் வழி­வ­குக்கும்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தனது நிர்­வா­கத்தில் முக்­கிய பத­வி­க­ளுக்கு, இரா­ணுவ அதி­கா­ரி­களை தெரிவு செய்­வதும், நிய­மிப்­பதும், இரா­ணுவ ஆட்­சியை நோக்கி நாட்டைக் கொண்டு செல்­வ­தான குற்­றச்­சாட்­டு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தாலும், அந்த முடிவில் அவர் பின்­வாங்­க­வில்லை.

ஊழல் இல்­லாத, செயற்­தி­றன்­மிக்க நிர்­வா­கத்தை இரா­ணுவப் பின்­புலம் கொண்­ட­வர்­களால் தான் வழங்க முடியும் என்று அவர் நம்­பு­கிறார். அது அவ­ரது பலம் என்­பதா- பல­வீனம் என்­பதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஏனென்றால், இராணுவ அதிகாரிகளால் தான் எல்லாவற்றையும் சீரமைக்க முடியும் என்ற நிலைப்பாடு தவறானது, அது அரச நிர்வாக இயந்திரத்தில் உள்ள சிவில் அதிகாரிகளை அவமானப்படுத்தும், விதத்திலும் இருக்கிறது.

அவர்களை திறமையற்றவர்களாக, ஊழல் செய்பவர்களாக அடையாளப்படுத்தக் கூடியது. சிலர் அவ்வாறானவர்களாக இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த சிவில் நிர்வாக கட்டமைப்பும் அவ்வாறானதல்ல.

சிவில் நிர்வாக செயற்பாடுகளில் இராணுவ பின்புலம் கொண்ட அதிகாரிகளின் மீது ஜனாதிபதி வைக்கும் நம்பிக்கை, சிவில் அதிகாரிகளின் நம்பிக்கையீனத்தையும் சேர்த்தே சம்பாதிக்கிறது.

சிவில் அதிகாரிகள் தங்கள் அதிகாரங்கள் பறிக்கப்படுவதையோ, தாம் இரண்டாம் நிலைப்படுத்தப்படுவதையோ விரும்பமாட்டார்கள். 

அதேவேளை, சிவில் நிர்வாக கட்டமைப்பில் முழுமையான இராணுவ ஆதிக்கம் ஏற்படுமானால், அது, சர்வதேச அளவில் இலங்கைக்கு நன்மையைப் பெற்றுக் கொடுக்காது.  

- சுபத்ரா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்