காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை காதலன் உதவியுடன் மகள் கொலை செய்த அதி­ர்ச்சி சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தமி­ழ­கத்தின் கோவை சொக்கம்புதூரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55). இவருக்கு பிரமிளா (42) என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். விவசாயியான நாகராஜ் நெகமம் அருகே தேவணாம்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்துக்கு வாரத்துக்கு ஒரு நாள் சென்றுவருவதை வழ­மை­யாக கொண்­டுள்­ளார்.

கடந்த மாதம் 23-ஆம் திகதி தோட்டத்துக்கு சென்றிருந்தபோது தேவணாம்பாளையம் அருகே அவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நெகமம் பொலி­ஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவருடைய மகள் மகாலட்சுமியே, தனது காதலன் சதீஷ்டன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சதீஷின் நண்பர்கள் மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன்(19), கிருஷ்ணகுமார் (19), சசிக்குமார் (20), சந்தோஷ்குமார் (20) ஆகிய 4 பேரை பொலி­ஸார் கைது செய்தனர். மகாலட்சுமி, தனது காதலன் சதீஷூடன் கடந்த

வெள்ளிக்­கி­ழ­மைகோவை நீதி­மன்­றத்தில் சர­­ண­டைந்­தார். நீதிபதி அவர்களை 17-ஆம் திக­தி பொள்ளாச்சி நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜ­ராக உத்­த­ர­விட்டார்.

இதைத்தொடர்ந்து சதீஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் 4 பேரும் பொள்ளாச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். மகாலட்சுமி கோவையில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த வழக்கு குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து பொலிஸார் தெரி­வித்­துள்­ள­த­ா­வ­து, நாகராஜின் மகள் மகாலட்சுமி 2 ஆண்டுகளாக சதீஷை காதலித்து வந்தார். இதை அறிந்த நாகராஜ் மகளை கண்டித்தார். ஆனாலும் மகாலட்சுமி, சதீஷூடன் சுற்றித்திரிந்தார். இவர்களின் காதலுக்கு மகாலட்சுமியின் தாய் பிரமிளா ஆதரவு தெரிவித்துள்ளார். நாகராஜிக்கு எழுத படிக்க தெரியாது என்பதால் அவர் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க மகாலட்சுமியைதான் அழைத்துச்செல்வார்.

இதனால் மகாலட்சுமி தனது காதலனுக்கு தந்தையின் ஏ.டி.எம். கார்ட் மூலம் பணம் எடுத்துக் கொடுத்து மோட்டார் சைக்கிள் வாங்கும்படி கூறியுள்ளார். அதோடு அவரது செலவுக்கு வீட்டில் இருந்து நகைகளையும் எடுத்து கொடுத்துள்ளார். மோட்டார் சைக்கிளில் காதலர்கள் இரு­வரும் உல்­லா­ச­மாக சுற்றி வந்­துள்­ளனர்.

நாகராஜிக்கு தனது கணக்கில் பணம் குறைவதையும், வீட்டில் இருந்த நகைகள் காணாமல்போவதையும் கண்டுபிடித்துவிட்டார். அப்போது மகாலட்சுமியை கண்டித்ததற்கு அவரது தாய் மகளுக்கு ஆதரவாக பேசினார். இதன் காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ், தனது மனைவி பிரமிளா, மகள் மகாலட்சுமி ஆகியோரை வீட்டை விட்டு விரட்டியுள்ளார். உடனே சதீஷ் அவர்களை மலுமிச்சம்பட்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கவைத்தார்.

தொடர்ந்து மகாலட்சுமி தனது காதலன் சதீஸிடம், எனது தந்தை உயிரோடு இருக்கும் வரை நாம் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ முடியாது, சொத்துகளையும் தரமாட்டார். எனவே அவரை கொலை செய்துவிடு என தெரிவித்தார். நகைகளை அடகு வைத்து ஒன்­றரை இலட்­சம் பணம் தருகிறேன், ஆட்களை வைத்து கொலை செய்துவிடு என்று பேரம் பேசியுள்ளார்.

இதன்படி சதீஷ் தனது நண்பர்கள் 4 பேர் உதவியுடன், அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மகாலட்சுமியின் தாய் பிரமிளாவையும் தேடி வருகிறோம். என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.