பேரறிவாளன், நளினி, உள்ளிட்ட 7 பேரை தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்ய உத்தரவிட்டால் அவரது பெயர் வரலாற்றில் இடம்பெறும் என்று ம.தி.மு.க .பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

பேரறிவாளின் விடுதலையை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் நடைபெற்ற பேரணி குறித்து கருத்து தெரிவித்த வைகோ, சிறையில் வாடும் 7 தமிழர்களை முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்தால் அவரது பெயர் வரலாற்றில் இடம் பெறும். என்றும் உலகத்தமிழர்கள் அனைவரும் அவரை வாழ்த்துவார்கள் . 

7 தமிழர்கள் விடுதலைக்காக உலகத்தமிழர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் பின்னால் நிற்பார்கள் என்றும் துணிச்சலுடன் அவர் முடிவெடுக்க வேண்டும் . 

7 தமிழர்களின் விடுதலைக்கு ஒரே வழி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவை பயன்படுத்துவது தான். இதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கும் நிலையில், மத்திய அரசிடம் முறையிடுவது தேவையற்றது என்றார். 

இதேவேளை சென்னையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பியதாகவும் சிகிக்சையில் இருப்பதால் தன்னால் பங்கேற்க முடியாமல் போய்விட்டதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.