டெல்லியில் ஏழை குழந்தைகளை உணவகத்திற்குள் அனுமதிக்காத காரணத்தால் பெண்மணி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சோனாலி ஷெட்டி என்ற பெண், தனது கணவரின் பிறந்தநாளையொட்டி, ஏழை குழந்தைகளை அழைத்து கொண்டு உணவகம் ஒன்றுக்கு சென்றுள்ளார். 

ஆனால், உணவகத்திற்குள் சென்றவுடன், ஏழை குழந்தைகளின் உடைகள் சரியில்லை என அவர்களை வெளியேறுமாறு உணவகத்தின் உரிமையாளர் கூறியதால் சர்ச்சை எழுந்துள்ளது.   

இதையடுத்து குழந்தைகளின் உடைகள் சரியில்லை என்பதால் வெளியேற்றப்படுவதை ஏற்க முடியாது என சோனாலி ஷெட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, உணவகத்திற்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்த உணவக உரிமையாளர் மல்ஹோத்ரா, உணவகத்துக்குள் வந்த சிறுவர்கள் கூச்சலிட்டு மற்றவர்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தியதால் தான் வெளியேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

மேலும் தன்னுடைய உணவகத்திற்குள் யார் வரவேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை தனக்கு உள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.