விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நெல் 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் பணி ஆரம்பம் 

Published By: R. Kalaichelvan

03 Feb, 2020 | 11:48 AM
image

2019/2020 பெரும்போகத்தில் அரசாங்கம் நெல்லைக் கொள்வனவு செய்யும் பணியின் கீழ் ஒரு கிலோ நெல் 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு தற்போது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு விசேட சலுகைகளாக முதல் முறையாக ஈரத்தன்மையுடன் கூடிய நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் கீழ் 25 வீத ஈரத்தன்மையைக் கொண்ட தரத்துடனான நெல் கொள்வனவு செய்யப்படுகிறது. கடந்த வருடங்களில் நாட்டரிசி நெல் ஒரு கிலோ 38 ரூபாவுக்கும், சம்பா நெல் ஒரு கிலோ 41 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்பட்டது.

இம்முறை அனைத்து ரக நெல்லுக்கும் ஆகக்கூடிய விலை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசாங்கம் ஒரு கிலோ நெல்லை 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்கின்றது. விவசாயிகளுக்கு மிகவும் வசதியான முறையில் அரசாங்கத்திற்கு நெல்லை வழங்குவதற்காக இரண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் கீழ், நெல் சந்தைப்படுத்தல் சபையின் மூலம் கூடுதல் ஈரத்தன்மையைக் கொண்டதும் தரத்துடனான நெல்லை கொள்வனவு செய்யப்படுகிறது. அத்தோடு, இதன் கீழ் கிலோவுக்கு 50 ரூபா வழங்கப்படுகின்றது.

மாவட்டச் செயலாளர்களின் வழிகாட்டலில் பிரதேச செயலாளர் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் முதன் முறையாக ஈரத்தன்மையான நெல்லைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் கீழ், 14 சதவீத ஈரத்தன்மையைக் கொண்டதும், ஆகக்கூடிய வகையில் 22 வீத ஈரத்தன்மையுடைய ஒரு கிலோ நெல்லுக்கு 44 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகிறது.

இதேபோன்று இந்த நடைமுறை மூலம் 14 சதவீத ஈரத்தன்மையுடனும் உரிய தரத்துடன் கொண்ட ஒரு கிலோ நெல்லுக்கு 50 ரூபா வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கரில் கொள்வனவு செய்யப்படும் ஆகக்கூடிய நெல்லின் தொகை ஆயிரம் கிலோவாகும்.

ஒரு ஏக்கர் தொடக்கம் 3 ஏக்கர் வரையிலான நெற்காணிகளில் 3 ஆயிரம் கிலோ கிராம் தொடக்கம் 5 ஆயிரம் கிலோகிராம் வரையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது. இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ஆரம்ப கட்ட நடவடிக்கைக்காக 3 ஆயிரத்து 830 மில்லியன் ரூபா வங்கி நிதியத்திலிருந்து நெல் சந்தைப்படுத்தல் சபைக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்வதற்கு திறைசேரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபை கொண்டுள்ள களஞ்சியசாலைகளும், உணவு ஆணையாளர் திணைக்களம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் கொண்டுள்ள களஞ்சியசாலைகளும் அதேபோன்று சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் உரிமையாளர்கள் கொண்டுள்ள நெல் ஆலைகளிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின், நாட்டைக் கட்டியெழுப்பும் சௌபாக்கிய தொலைநோக்கிற்கு அமைய இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02