அமெரிக்காவின் ப்ளொரிடா மாநிலத்தில் இடம்பெற்ற சங்கீத நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டிருந்த போது பிரபல பாடகியான கிறிஸ்டீனா கிரிமி துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.

22 வயதுடைய கிறிஸ்டீனா கிரிம் ரசிகர்களின் ஞாபகார்த்தப் புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.

குறித்த கொலைச் சம்பவத்தை 26 வயதுடைய கெவின் ஜேம்ஸ் லொய்பர் என்னும் சந்தேக நபரே செய்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த சந்தேகநபர் அதே துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டமையினால் குறித்த கொலைச் சம்பவம் தொடர்பான எவ்வித தகவல்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.