அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் டொமினிக்  தீமை வீழ்த்தி நோவக் ஜோகவிச் எட்டாவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றினார்.

மெல்போர்னில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்றைய தினம் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் 5 ஆவது இடத்திலுள்ள 26 வயதுடைய ஆஸ்திரியாவின் டொமினிக் தீமும், 32 வயதான செர்பியாவின் நோவக் ஜோகோவிசும் ஒருவரை ஒருவர் எதிர்த்தாடினர்.

சுமர் நான்கு மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் இறுதியில் ஜோகோவிச் 6-4, 4-6, 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டொமினிக் தீமை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் பட்டம் வெல்வது இது எட்டாவது முறையாகும். 

இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு வந்தார்.